தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6314

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(almujam-alawsat-6314: 6314)

حَدَّثَنَا الصَّائِغُ، ثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالَقَانِيُّ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ السَّفَرِ الدِّمَشْقِيُّ، ثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءٍ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُنْزِلُ اللَّهُ عَلَى أَهْلِ الْمَسْجِدِ مَسْجِدِ مَكَّةَ كُلَّ يَوْمٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ، سِتِّينَ مِنْهَا لِلطَّائِفِينَ، وَأَرْبَعِينَ لِلْمُصَلِّينَ، وَعِشْرِينَ مِنْهَا لِلنَّاظِرِينَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْأَوْزَاعِيِّ إِلَّا عَبْدُ الرَّحْمَنِ بْنُ السَّفَرِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6314.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6483.




إسناد شديد الضعف فيه عبد الرحمن بن السفر الدمشقي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21551-அப்துர்ரஹ்மான் பின் ஸஃபர் என்பவரும், ராவீ-49517-யூசுப் பின் ஃபைள் என்பவரும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்…..இருவரையும் ஹதீஸ்கலை அறிஞர்கள் மிக பலவீனமானவர்கள் என்று விமர்சித்துள்ளனர்.
  • ராவி அப்துர்ரஹ்மான் பின் ஸஃபர்-யூஸுப் பின் ஸஃபர் என்பவர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான் 5/105) 

  • ராவி யூசுப் பின் ஃபைள் பற்றி அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரைப் பலவீனமானவர், புறக்கணிக்கப்படுவதற்கு ஒப்பானவர் என்று விமர்சித்துள்ளார்.

(அல்ஜரஹ் வத்தஃதீல் : 9/228)

نا عبد الرحمن قال : سألت أبي عنه فقال : منكر الحديث جدا

الجرح والتعديل لابن أبي حاتم: (9 / 223)


மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11248 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.