தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-858

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை சொர்க்கத்தில் நுழைய முடியாது. (ஏன்) அந்தக் குழந்தையின் சந்ததிகளில் ஏழு தந்தை வரை (பிறந்தவர்களில்) எவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(almujam-alawsat-858: 858)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْحُلْوَانِيُّ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ أَبِي هَوْذَةَ قَالَ: نا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَدْخُلُ وَلَدُ الزِّنَا الْجَنَّةَ وَلَا شَيْءٌ مِنْ نَسْلِهِ إِلَى سَبْعَةِ آبَاءٍ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-858.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-876.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11693-ஹஸன் பின் இத்ரீஸ் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் ராவீ-1201-இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் வலிமை வாய்ந்தவர் அல்ல என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் : 2, பக்கம் :133)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.