நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10007)حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو عُبَيْدَةَ الْعَسْكَرِيُّ، ثنا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْبَزَّازُ، ثنا الْهَيْثَمُ بْنُ الشَّدَّاخِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَلْ فِي سَعَةٍ سَائِرَ سَنَتِهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10007.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-9868.
إسناد فيه متهم بالوضع وهو هيصم بن الشداخ الوراق وهو متهم
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹைஸம் பின் ஷத்தாஃக் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; அப்துல்மலிக் பின் யஹ்யா அறியப்படாதவர்; அலீ பின் ஹம்மாத் (அலீ பின் அபூதாலிப் பஸ்ஸார்) பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: லிஸானுல் மீஸான் 8 / 366 )
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10007 , ஷுஅபுல் ஈமான்-3513 ,
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-9302 , ஷுஅபுல் ஈமான்-3514 ,
3 . ஜாபிர் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : ஷுஅபுல் ஈமான்-3512 , 3515 , 3517 ,
4 . வேறு சிலர் வழியாக:
சமீப விமர்சனங்கள்