தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10417

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” (“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.

இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10417)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا سُلَيْمَانُ بْنُ أَيُّوبَ صَاحِبُ الْبَصْرِيِّ، ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللهِ رَفَعَهُ قَالَ:

«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ؛ فَإِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَنَفَسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ، كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10417.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10268.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…
  • இந்த செய்தியை ஹைஸமீ அவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளார். அவரைப் போன்றே அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் தனது ஸஹீஹாவில்-2151 இல் இதை ஹஸன் என்று கூறியுள்ளார்…
  • இந்த செய்தியின் முதல் பகுதி சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. (பார்க்க: முஸ்லிம்-1672 )

மேலும் பார்க்க: திர்மிதீ-980 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.