தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-980

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

980. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

 

இப்னு மஸ்வூத் (ரலி)

عبد الله بن مسعود

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பின் ஃகாஃபில் பின் ஹபீப் பின் ஷம்க் பின் ஃபார் பின் மக்ஸூம் பின் ஸாஹிலா பின் காஹில் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஸ்வூத் பின் ஃகாஃபில்

வம்சம்: அல்ஹுதல், பனூ ஸுஹ்ரா கூட்டாளியாவார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் பயணங்களில் உடன் செல்பவராகவும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குணநலன்களில் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டார்கள்.

குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதக்கூடியவராகவும், அதன் விளக்கங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்கள். ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), ஸஃத் பின் முஆத், உமர் பின் கத்தாப் (ரலி), ஸஃப்வான் பின் அஸ்ஸால்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ், அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அப்துல்லாஹ் பின் உத்பா, அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அல்கமா பின் கைஸ், அல்அஸ்வத் பின் யஸீத், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அபூ அப்துர்ரஹ்மான், இப்னு உம்மி அப்த்


ஆதாரம்: muslimscholars.info (16) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا حُسَامُ بْنُ الْمِصَكِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَال: سَمِعْتُ عَبْدَ اللهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ:

إِنَّ نَفْسَ الْمُؤْمِنُ تَخْرُجُ رَشْحًا، وَلاَ أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ. قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: مَوْتُ الْفَجْأَةِ.


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-980.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-900.



குறிப்பு: பஷ்ஷார் அவர்கள், சில ஆதாரத்தின் அடிப்படையில் இந்த செய்தி திர்மிதியில் உள்ளது அல்ல என்று கூறியுள்ளார். சில பிரதிகளில் இருந்தாலும் அது தவறு என்று கூறியுள்ளார்.

إسناد ضعيف فيه حسام بن مصك الأزدي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுஸாம் பின் மிஸக் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • இப்ராஹீம் (ரஹ்) வழியாக இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலவை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சொல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்கள். (நூல்: அல்இலலுல் வாரிதா 5/143 )
  • என்றாலும் அல்முஃஜமுல் கபீர்-10417 எண்ணில் வரும் செய்தியைபற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் எதுவும் கூறவில்லை.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6772 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12012 , திர்மிதீ-980 , அல்முஃஜமுல் கபீர்-8866 , 10015 , 10049 , 10417  , அல்முஃஜமுல் அவ்ஸத்-5902 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15496 , அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 , அஹ்மத்-8666 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.