தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10518

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய வாகனம் தப்பிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள்” என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10518)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَائِلَةَ الْأَصْبَهَانِيُّ، ثنا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، ثنا مَعْرُوفُ بْنُ حَسَّانَ السَّمَرْقَنْدِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِذَا انْفَلَتَتْ دَابَّةُ أَحَدِكُمْ بِأَرْضِ فَلَاةٍ فَلْيُنَادِ: يَا عِبَادَ اللهِ، احْبِسُوا عَلَيَّ، يَا عِبَادَ اللهِ احْبِسُوا عَلَيَّ؛ فَإِنَّ لِلَّهِ فِي الْأَرْضِ حَاضِرًا سَيَحْبِسُهُ عَلَيْكُمْ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10518.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10371.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . இப்ராஹீம் பின் முஹம்மத்-இப்ராஹீம் பின் நாஇலா

3 . ஹஸன் பின் உமர் பின் ஷகீக்

4 . மஃரூஃப் பின் ஹஸ்ஸான்

5 . ஸயீத் பின் அபூஅரூபா

6 . கதாதா பின் திஆமா

7 . அப்துல்லாஹ் பின் புரைதா

8 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


إسناد ضعيف فيه معروف بن حسان السمرقندي وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மஃரூப் பின் ஹஸ்ஸான் பலவீனமானவர்.
  • இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.
  • இவர் யார் என அறியப்படாதவர் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்…
  • இவர் ஹதீஸ்களை தவறுதலாக அறிவிப்பவர் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    கூறியுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான் 8/106)


لسان الميزان: (8 / 106)
وقال ابن أبي حاتم ، عن أبيه : مجهول
مجمع الزوائد ومنبع الفوائد: (10 / 132)
فيه معروف بن حسان وهو ضعيف

 


மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-5269.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.