ஜமீலா பின்த் ஸலூல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. (அவரை) வெறுப்பதை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அப்போது, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஸாபித், உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள் அவர், ‘ஆம் (தந்து விடுகிறேன்)’ என்று கூறினார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸுக்கு (அவர் தனது மனைவிக்கு மஹராக கொடுத்த) தோட்டத்தை தன் மனைவியிடமிருந்து பெற்றுக்கொள்ள கட்டளையிட்டார்கள். (வேறு எதையும்) அதிகபடுத்தவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11834)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، ثنا عَبْدُ الْأَعْلَى، ثنا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ جَمِيلَةَ بِنْتَ سَلُولٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لَا أَعْيَبُ عَلَى ثَابِتِ بْنِ قَيْسٍ فِي خُلُقٍ، وَلَا دَيْنٍ، وَلَكِنِّي لَا أُطِيقُهُ، وَأَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْخُذَ مِنْهَا مَا سَاقَ إِلَيْهَا وَلَا يَزْدَادَ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11834.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11675.
சமீப விமர்சனங்கள்