இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தன் முகத்தில் இரத்தம் வடிய, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்றேன். அதனால் ஒருவர், நீங்கள் என்னை பார்க்கும் இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார் என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவரின் பாவத்திற்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப் போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11842)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، وَجَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ مَالِكٍ الْفَزَارِيُّ الْكُوفِيُّ، قَالَا: ثنا عَبَّادُ بْنُ يَعْقُوبَ الْأَسَدِيُّ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ الْعَرْزَمِيُّ، عَنْ شَيْبَانَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيلُ وَجْهُهُ دَمًا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي اتَّبَعْتُ امْرَأَةً، فَلَقِيَنِي رَجُلٌ فَصَنَعَ بِي مَا تَرَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ عُقُوبَةَ ذَنْبِهِ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنَبِهِ حَتَّى يُوافِيَهُ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عِيرٌ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11842.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11683.
إسناد شديد الضعف فيه عباد بن يعقوب الرواجني وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்பாத் பின் யஃகூப் மிக பலவீனமானவர்…
3 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11842 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-16806 .
சமீப விமர்சனங்கள்