ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12135)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُؤَدِّبُ، ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنِي أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِي رَجُلٍ جَامِعَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «إِنْ كَانَ دَمًا عَبِيطًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، وَإِنْ كَانَ صُفْرَةً فَبِنِصْفِ دِينَارٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12135.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11973.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஈஸா பின் மாஹான் என்ற அபூ ஜஃபர் அர்ராஸி பலவீனமானவர். மேலும் அப்துல் கரீம் பின் அபில் மகாரிக் மிக பலவீனமானவர் ஆவார்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்