அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நமக்கு செய்ய வேண்டிய கடமையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12276)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، حَدَّثَنِي أَبِي، ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا، وَيَعْرِفْ لَنَا حَقَّنَا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12276.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12117.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40931-முஹம்மது பின் உபைதுல்லாஹ் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(மின்ஹால் பின் அம்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் உபைதுல்லாஹ் பின் அபூஸுலைமான் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/874)
இந்த செய்தியில் இடம்பெறுபவர் இவராக இருந்தால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-458 .
சமீப விமர்சனங்கள்