நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து, வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து, ஃபதகப்பல் மின்னீ, இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம்” (பொருள்: “அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன்; உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்; என்னிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12720)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا يُوسُفُ بْنُ قَيْسٍ الْبَغْدَادِيُّ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَفْطَرَ قَالَ: «لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12720.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12559.
إسناد فيه عبد الملك بن هارون الشيباني وهو يضع الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்மலிக் பின் ஹாரூன் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டும் பொய்யர்; யூஸுஃப் பின் கைஸ் யாரென அறியப்படாதவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-2358 .
சமீப விமர்சனங்கள்