தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-13497

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறந்த பின், ஹஜ் செய்பவர் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வந்தால் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13497)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، ثنا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ وَفَاتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13497.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13323.




إسناد فيه متهم بالوضع وهو حفص بن أبي داود الأسدي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர். லைஸ் பின் அபூ ஸுலைம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.