தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-224

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக்  கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 224)

حَدَّثَنَا عَمْرُو بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ بْنِ زِبْرِيقٍ، حَدَّثَنِي أَبِي إِبْرَاهِيمُ بْنُ الْعَلَاءِ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ قَالَا: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ: لَا تُؤْذِيهِ، قَاتَلَكِ اللهُ، وَإِنَّمَا هُوَ عِنْدَكَ دَخِيلٌ يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-224.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16678.




இந்தச் செய்தியின் இரண்டு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அம்ர் பின் இஸ்ஹாக்

3 . இப்ராஹீம் பின் அலா

4 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்

5 . பஹீர் பின் ஸஃத்

6 . காலித் பின் மஃதான்

7 . கஸீர் பின் முர்ரா

8 . முஆத் பின் ஜபல் (ரலி)


1 . தப்ரானீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

3 . தாவூத் பின் அம்ர்

4 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்

5 . பஹீர் பின் ஸஃத்

6 . காலித் பின் மஃதான்

7 . கஸீர் பின் முர்ரா

8 . முஆத் பின் ஜபல் (ரலி)


மேலும் பார்க்க: திர்மிதீ-1174 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.