ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களும் ஹுஸைன் (ரலி) அவர்களும் பிறந்தபோது அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறினார்கள். மேலும் (மற்றவர்களுக்கும்) அதைக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2579)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا عَوْنُ بْنُ سَلَّامٍ وَجُبَارَةُ بْنُ مُغَلِّسٍ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ شُعَيْبٍ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِي رَافِعٍ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ حِينَ وُلِدَا، وَأَمَرَ بِهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-2579.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-2513.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆஸிம் பின் உபைதுல்லாஹ், ஹம்மாத் பின் ஷுஐப் போன்றோர் பலவீனமானவர்கள். ஜுபாரா பின் முஃகல்லஸ் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .
சமீப விமர்சனங்கள்