: “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடிந்தவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3964)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو الْقَطِرَانِيُّ، ثنا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، ثنا أَشْعَثُ بْنُ سَوَّارٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَفَعَهُ قَالَ:
«الْوِتْرُ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُومِئْ إِيمَاءً»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3964.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3866.
إسناد ضعيف فيه أشعث بن سوار الكندي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அஷ்அஸ் பின் ஸவ்வார் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .
சமீப விமர்சனங்கள்