ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள்.
அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும், அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 508)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ هُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ،
أَنَّ رَجُلًا ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَصَابَ امْرَأَةً ذَاتَ جَمَالٍ وَمَنْصِبٍ، غَيْرَ أَنَّهَا لَا تَلِدُ فَنَهَاهُ عَنْهَا، ثُمَّ عَادَ فَنَهَاهُ عَنْهَا، وَقَالَ: «تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-508.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16932.
إسناد شديد الضعف فيه إسماعيل بن هود الواسطي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் ஹூத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-2050 .
சமீப விமர்சனங்கள்