தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2050

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாமென்று கூறினார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள்.

அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)

(அபூதாவூத்: 2050)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ ابْنَ أُخْتِ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ مَنْصُورٍ يَعْنِي ابْنَ زَاذَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ، وَإِنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا، قَالَ: «لَا» ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2050.
Abu-Dawood-Shamila-2050.
Abu-Dawood-Alamiah-1754.
Abu-Dawood-JawamiulKalim-1757.




2 . இந்தக் கருத்தில் மஃகில் பின் யஸார் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2050 , நஸாயீ-3227 , குப்ரா நஸாயீ-5323 , இப்னு ஹிப்பான்-4056 , 4057 , அல்முஃஜமுல் கபீர்-508 , ஹாகிம்-2685 , குப்ரா பைஹகீ-13475 ,


இந்த ஹதீஸில் இடம் பெறும் (وَإِنَّهَا لَا تَلِدُ) குழந்தையை பெற்றெடுக்க மாட்டாள் என்பதற்கு குழந்தையை பெற விரும்பாத பெண் என்று பொருளாகும். குழந்தை பெற இயலாதவள் என்ற பொருள் அல்ல. சில மேலை நாடுகளில் வாழ்வது போன்று குழந்தை பெறாமல் வாழும் வாழ்க்கை இஸ்லாமிய மார்க்கத்திற்கு உகந்த வாழ்க்கை அல்ல என்ற அறிவுரை இந்த ஹதீஸில் அடங்கியுள்ளது.


மேலும் பார்க்க: அஹ்மத்-12613 .

 

6 comments on Abu-Dawood-2050

  1. இந்த கருத்தில் வரும் அனைத்து ஹதீஸையும் பலவீனம் என்று ஒரு அறிஞர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்…பலவீனத்துடைய காரணத்தை அவர் விளக்கவில்லை…

    உண்மையில் இந்த ஹதீஸை மறுப்பதற்க்கு ஏதெனும் காரணம் உண்டா…அந்த காரணம் ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இல்லாததனால் நீங்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளீர்களா…?

    விளக்கம் தரவும்

    இதற்கு முன்னால் வரை இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் இப்பொழுது குழப்பத்தில் இருக்கிறேன்…

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சகோதரரே. நீங்கள் குறிப்பிட்ட உரையின் லின்க்கை அனுப்பவும். அதன்பிறகே இதைப் பற்றி முடிவு செய்ய முடியும்.

      1. https://youtu.be/AJNKhqMcu1Q?si=jCak4MdZh5Q7FUIl

        திருமண இலக்குகள் என்ற தலைப்பில் பேசப்பட்ட உரை…அந்த விடியோவில் 9:30-10:05 நிமிடங்களுக்குள் இந்த ஹதீஸ் சம்மந்தமாக பேசியிருக்கிறார்

        1. ஜஸாகல்லாஹு கைரா. நாம் பார்த்தவரை இந்த அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இல்லை. இவ்வாறே அனஸ் (ரலி) வழியாக வரும் சில அறிவிப்பாளர்தொடரிலும் விமர்சனம் இல்லை. ஹஸன் லிதாதிஹீ தரத்தில் உள்ள செய்திகள் பலவை வந்துள்ளதால் இவை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தர செய்திகளாகும்.

          முஜாஹித் அவர்கள், இதுப்பற்றி வேறு வீடியோக்களில் கூறியிருந்தால் மட்டுமே அதுபற்றி ஆய்வு செய்யலாம்.

          1. இந்த ஹதீஸில் இடம் பெறும் (وَإِنَّهَا لَا تَلِدُ) குழந்தையை பெற்றெடுக்க மாட்டாள் என்பதற்கு குழந்தையை பெற விரும்பாத பெண் என்று பொருளாகும். குழந்தை பெற இயலாதவள் என்ற பொருள் அல்ல. சில மேலை நாடுகளில் வாழ்வது போன்று குழந்தை பெறாமல் வாழும் வாழ்க்கை இஸ்லாமிய மார்க்கத்திற்கு உகந்த வாழ்க்கை அல்ல என்ற அறிவுரை இந்த ஹதீஸில் அடங்கியுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.