அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எந்த தொழுகைக்கும் செல்வதாக இருந்தால் பல்துலக்காமல் அதற்கு செல்லமாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5261)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ الْأَصْبَهَانِيُّ، ثنا سَهْلُ بْنُ عُثْمَانَ، ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، عَنْ صَالِحٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ:
- «مَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ شَيْءٍ لِشَيْءٍ مِنَ الصَّلَوَاتِ حَتَّى يَسْتَاكَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-5261.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-5121.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25079-அபூஅய்யூப்-அப்துல்லாஹ் பின் அலீ அல்அஸ்ரக்-அல்(அ)இஃப்ரீகீ பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் லைஸ பிஹீ பஃஸ்-இவரிடம் குறை இல்லை என்று கூறியுள்ளார். இந்த வார்த்தை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் பார்வையில் பலமானவர் என்பதைக் குறிக்கும்.
அப்பாஸ் அத்தூரீ கூறுகிறார்:
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இப்னு அபூஸாயிதா என்பவர் அபூஅய்யூப் அல்இஃப்ரீகீயிடமிருந்து அறிவித்தார் என்று கூறினார். நான், அபூஅய்யூபின் பெயர் என்ன? என்று கேட்டேன். அதற்கவர், எனக்குத் தெரியாது என்று கூறினார். நான், அவர் பலமானவரா? என்று கேட்டேன். ஆம், லைஸ பிஹீ பஃஸ் என்று கூறினார்.
(நூல்: தாரீகு இப்னு மயீன்-5331, தஹ்தீபுத் தஹ்தீப்-2/388)
- அபூஸுர்ஆ அவர்கள், இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரின் செய்தியில் ஆட்சேபனை இருக்கிறது. இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/115, அல்காஷிஃப்-3/158, தஹ்தீபுத் தஹ்தீப்-2/388)
- எனவே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/528)
- இந்த செய்தியை முன்திரீ, ஸுயூதீ போன்ற அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
என்றாலும் அதிகமானவர்கள் ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வேறு வகையான வார்த்தையை அறிவித்துள்ளனர். இவர் மட்டுமே இந்த செய்தியை தனித்து அறிவிப்பதால் இது பலவீனமாகிறது. எனவே தான் இப்னு ரஜப் அவர்கள், இதை அரிதான செய்தி என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-8/125, ளயீஃப் தர்கீப்-143)
சமீப விமர்சனங்கள்