ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 73)حَدَّثَنَا علانُ بْنُ عَبْدِ الصَّمَدِ الطَّيَالِسِيُّ مَاغِمَةُ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْأَسَدِيُّ، ثنا أَبِي، ثنا قَيْسٌ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ، وَالْأَظْفَارِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-73.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17571.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الجبار بن وائل الحضرمي ووائل بن حجر الحضرمي ، وباقي رجاله ثقات وصدوقيين عدا الحسن بن الزبير الأسدي وهو مجهول الحال (جوامع الكلم)
இந்த செய்தியில் மூன்று குறைகள் உள்ளது.
- இதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
- இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளாறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
- இதில் ஹஸன் பின் ஸுபைர் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவர் அறியப்படாதவர் ஆவார்.
மேலும் பார்க்க : ஷுஅபுல் ஈமான்-6069 .
சமீப விமர்சனங்கள்