முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:
இந்த செய்தி பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.
(shuabul-iman-6069: 6069)أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ الْفَقِيهُ، أَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ الْأَصْبَهَانِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، ثَنَا أَبِي، ثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
كَانَ يَأْمُرُ بِدَفْنِ الشَّعْرِ وَالْأَظْفَارِ
هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ وَرُوِيَ مِنْ أَوْجُهٍ، كُلُّهَا ضَعِيفَةٌ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-6069.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-5986.
இந்த செய்தியில் மூன்று குறைகள் உள்ளது.
- இதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
- இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளாறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
- முஹம்மத் பின் ஹஸன் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்கள்.
நூலாசிரியர் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களே இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும் என கூறியுள்ளார்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25661 , அல்முஃஜமுல் கபீர்-73 , ஷுஅபுல் ஈமான்-6069 ,
கூடுதல் தகவல் பார்க்க: நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா? .
சமீப விமர்சனங்கள்