ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 771)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا أَبُو بَكْرِ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو إِسْحَاقَ الْأَزْدِيُّ، حَدَّثَتْنَا نَائِلَةُ، عَنْ أُمِّ عَاصِمٍ، عَنِ السَّوْدَاءِ، قَالَتْ:
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ فَقَالَ: «انْطَلِقِي فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَى حَتَّى أُبَايِعَكِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-771.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-20265.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ நாஇலா யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-712 .
சமீப விமர்சனங்கள்