அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை இரவில், அல்லது பகலில் துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8026)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ الْمَكِّيُّ، ثنا حَفْصُ بْنُ عُمَرَ الْمَازِنِيُّ، ثنا فَضَالُ بْنُ جُبَيْرٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ جُمُعَةٍ، أَوْ يَوْمَ جُمُعَةٍ بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8026.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7948.
إسناد ضعيف فيه فال بن جبير الغداني وهو ضعيف الحديث ، وحفص بن عمر المازني وهو مجهول
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33527-ஃபளால் பின் ஜுபைர் மிக பலவீனமானவர். இவர் அபூஉமாமா (ரலி) வழியாக ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களும், இவர் பலவீனமானவர் என அபூஹாத்திம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னுஅதீ போன்ற அறிஞர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இதில் வரும் ராவீ-13645-ஹஃப்ஸ் பின் உமர்-அபூஉமர் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-6030, 2668, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1568)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .
ஹப்ஸா இப்னு உமர் யார் என்றே அறியப்படாதவர் என்று லிஸானுல் மீஸான் கூறபட்டுள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா.