தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2889

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

2889. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை  ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ هِشَامٍ أَبِي المِقْدَامِ، عَنْ الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ غُفِرَ لَهُ»

«هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَهِشَامٌ أَبُو المِقْدَامِ يُضَعَّفُ، وَلَمْ يَسْمَعِ الحَسَنُ مِنْ أَبِي هُرَيْرَةَ، هَكَذَا قَالَ أَيُّوبُ وَيُونُسُ بْنُ عُبَيْدٍ وَعَلِيُّ بْنُ زَيْدٍ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2889.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2833.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹிஷாம் பின் ஸியாத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • துகான் அத்தியாயத்தின் சிறப்பு.

ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க : திர்மிதீ-2889 , முஸ்னத் அபீ யஃலா-6224 , 6232 ,

2 . ஃபளாலா பின் ஜுபைர் —> அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-8026 , 

3. அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-2888 ,

4 . மற்றவர்கள் வழியாக வரும் செய்திகள்: 

பார்க்க : தாரிமீ-3463 , 3464 , 

  • யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு.

1 . ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-2589 , தாரிமீ-3460 , முஸ்னத் அபீ யஃலா-6224 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3509 , அல்முஃஜமுஸ் ஸகீர்-417 , 

2 . ஹஸன் பஸரீ —> ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு ஹிப்பான்-2574 , 

3 . அபூ முஃதமிர் (ஸுலைமான் பின் தர்க்கான்)  —> ஹஸன் பஸரீ வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : தாரிமீ-3458 ,

மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2887 ,

3 comments on Tirmidhi-2889

  1. இமாம் திர்மிதீ (ரஹ்) கூறினார்கள்

    இது கரீப்(தனித்தது)..ஹிஸாம் அபுல் மிக்தம் இப்னு ஸியாத் அவரின் அறிவிப்பை தவிர்த்து வேறு அறிவிப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள்..ஹிஸாம் அபு அல் மிக்தம் என்பவர் பலவீனமானவர் ,ஹஸன் அவர்கள் அபுஹூரைரா அவர்களிடம் இருந்து எதையும் கேட்டறியவில்லை என்று அய்யூப்,யூனுஸ் இப்னு உபைத்,அலி இப்னு ஸயீத் கூறுகிறார்கள்

    இதில் இரண்டு பலவீனம் இருக்கிறது

    1)ஹிஸாம் அபுல் மிக்தம் இவர் நம்பிக்கையான அறிவிப்பாளர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவிப்பவர் அதனால் இவரது செய்தியை ஆதாரமாகக் ஏற்க கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) கூறுகிறார்கள்

    நூல்-தஹ்தீப் அல் தஹ்தீப்-11/39

    2)இந்த செய்தியில் ஹஸன் அவர்களுக்கும் அபுஹூரைரா அவர்களுக்கும் இடையே அறிவிப்பாளர் தொடர் முறிந்துள்ளது அதனால் இது பலவீனமான செய்தியாகும்

    இமாம் இப்னு ஜவ்ஜி இந்த செய்தி பலவீனமானது என்று கூறினார்கள்

    நூல்-மவ்ளூத்-(1/247)

    இந்த செய்தி பலவீனமான செய்தி என்று இப்னு அல் அரபி(ரஹ்) கூறுகிறார்கள்

    நூல்-அரிதா அல் ஹவ்வாதி-(6/35)

    இது பலவீனமான செய்தி என்று இமாம் அல்பானி(ரஹ்) ளயீஃப் அல் திர்மீதியில் கூறுகிறார்கள்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.