தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2888

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

பாடம்:

துஃகான் (44 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

2888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


بَابُ مَا جَاءَ فِي فَضْلِ حم الدُّخَانِ

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَعُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ يُضَعَّفُ قَالَ مُحَمَّدٌ: «وَهُوَ مُنْكَرُ الحَدِيثِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2888.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2832.



إسناد شديد الضعف فيه عمر بن عبد الله اليمامي وهو منكر الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .

2 comments on Tirmidhi-2888

  1. இந்த செய்தியில் உமர் இப்னு அபு ஹத்தாம் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர் என்று திர்மீதி,அஹ்மத் இப்னு ஹம்பல்,யஹ்யா இப்னு மயீன், அபூதாவூத் போன்ற ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள்

    உமர் இப்னு அபு ஹத்தாம் முன்கர்(நிராகரிக்கபட்டவர்) என்று முஹம்மத் கூறுவதாக இமாம் திர்மிதீ பதிவு செய்கிறார்கள்

    இந்த செய்தி பலவீனமானது என்று ஜலாலுதீன் சுயூத்தி தன்னுடைய அல் ஸஹீரில் கூறுகிறார்கள்

    இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்று இமாம் இப்னு ஜவ்ஜி(ரஹ்) கூறுகிறார்கள்

    நூல்-மவ்ளூத்-(1/248)

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    கூடுதல் தகவல் பதிவு செய்தமைக்கு ஜஸாகல்லாஹு கைரா.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.