தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-564

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் கொடுங்கோலர்களான தலைவர்கள், தீய அமைச்சர்கள், துரோகம் இழைக்கும் நீதிபதிகள், பொய்யர்களான சட்டமேதைகள் தோன்றுவார்கள். உங்களில் ஒருவர் அக்காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக வரி வசூலிப்பவராகவோ, அவர்களின் (செயலாளராகவோ அல்லது) ராணுவ அதிகாரியாகவோ, காவலராகவோ இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(almujam-assaghir-564: 564)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الثَّقَفِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ الْهَيْثَمِ بْنِ الرَّيَّانِ الْخُرَاسَانِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ سُلَيْمَانَ الْخُرَاسَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ:

«يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ أُمَرَاءُ ظَلَمَةٌ , وَوُزَرَاءُ فَسَقَةٌ , وَقُضَاةٌ خَوَنَةٌ , وَفُقَهَاءُ كَذَبَةٌ , فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ ذَلِكَ الزَّمَنَ فَلَا يَكُونَنَّ لَهُمْ جَابِيًا وَلَا عَرِيفًا وَلَا شُرْطِيًّا»

لَمْ يَرْوِهِ عَنْ قَتَادَةَ إِلَّا ابْنُ أَبِي عَرُوبَةَ , وَلَا عَنْهُ إِلَّا ابْنُ الْمُبَارَكِ تَفَرَّدَ بِهِ دَاوُدُ بْنُ سُلَيْمَانَ , وَهُوَ شَيْخٌ لَا بَأْسَ بِهِ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-564.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-565.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30630-அலீ பின் முஹம்மத் பின் அலீ யாரென அறியப்படாதவர். மேலும் ராவீ-44819-முஆவியா பின் ஹைஸம் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இதில் வரும் தாவூத் பின் ஸுலைமான் என்பவர் பற்றி தப்ரானீ அவர்கள் சுமாரானவர் என்று கூறியுள்ளார் என்பதைக் கூறிவிட்டு இதில் வரும் மற்ற அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்; ஆறு ஹதீஸ் நூல்களின் அறிவிப்பாளர்கள் என்றும், இந்த செய்தி இப்னு ஹிப்பான்-4586 எண்ணில் வரும் செய்திக்கு ஷாஹித் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-360)

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4586 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.