Author: Farook

Bukhari-6854

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

மானக்கேடான செயலையும் குற்றச் சாட்டையும் சந்தேகத்தையும் ஒருவர் சாட்சி இல்லாமல் வெளியிடுவது.

6854. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்து கொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், ‘இவளை நான் என்னிடமே (மனைவியாக) வைத்துக் கொண்டிருந்தால் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்யாகிவிடும்’ என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார்.

சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) ‘அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்’ என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன்.

Read More »

Bukhari-6853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6853. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!.66

Book :86


«مَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ يُؤْتَى إِلَيْهِ حَتَّى يُنْتَهَكَ مِنْ حُرُمَاتِ اللَّهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ»


Bukhari-6852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6852. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.65

Book :86


«أَنَّهُمْ كَانُوا يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَرَوْا طَعَامًا جِزَافًا، أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ، حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ»


Bukhari-6851

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6851. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர் நோன்பு நோற்க வேண்டாமென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் ‘அவ்வாறாயின், நீங்கள் தொடர் நோன்பு நோற்கின்றீர்களே, இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கிற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்’ என்றார்கள்.

தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்’ என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில் கூறினார்கள்.64

Read More »

Bukhari-6850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6850. அபூ புர்தா அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

Book :86


«لاَ تَجْلِدُوا فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»


Bukhari-6849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6849. அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:

‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book :86


«لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»


Bukhari-6848

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63

6848. அபூ புர்தா (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

Book : 86


«لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»


Bukhari-6847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

குறிப்பால் உணர்த்துவது தொடர்பாக வந்தவை.61

6847. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)’ என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்றார். ‘அவற்றின் நிறம் என்ன?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என கருதுகிறேன்’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ» قَالَ: نَعَمْ، قَالَ: «مَا أَلْوَانُهَا» قَالَ: حُمْرٌ، قَالَ: «هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَنَّى كَانَ ذَلِكَ» قَالَ: أُرَاهُ عِرْقٌ نَزَعَهُ، قَالَ: «فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ»


Bukhari-6846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

ஒருவர் தம் மனைவியுடன் அந்நிய ஆடவர் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டு அவரைக் கொன்று விட்டால் (என்ன சட்டம்)?

6846. முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்’ என்று கூறினார்கள். இச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விட ரோஷக்காரன்’ என்றார்கள்.60

Book : 86


قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: لَوْ رَأَيْتُ رَجُلًا مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، لَأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي»


Bukhari-6845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6845. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(என் கழுத்தாணியை நான் தொலைத்து விட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்கநேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், ‘ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்தால் நான் அசையாடிதிருந்தேன். அபூ பக்ர் (ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியினால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது… (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :86


أَقْبَلَ أَبُو بَكْرٍ، فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً، وَقَالَ: «حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ، فَبِي المَوْتُ، لِمَكَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ أَوْجَعَنِي نَحْوَهُ» لَكَزَ وَوَكَزَ وَاحِدٌ


Next Page » « Previous Page