Author: Farook

Bukhari-6769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

ஒரு பெண் தன் மகன் என (ஒருவனை) வாதிட்டால்…

6769. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(தாவூத் (அலை) அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் அவர்களின் புதல்வர்களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், ‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது’ என்று கூற, அதற்கு மற்றவள், ‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது’ என்று சொன்னாள். எனவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள்.

அப்போது சுலைமான் (அலை) அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக்

كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ لِصَاحِبَتِهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ ، وَقَالَتِ الأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ فَأَخْبَرَتَاهُ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا فَقَضَى بِهِ لِلصُّغْرَى

قَالَ أَبُو هُرَيْرَةَ: «وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلَّا يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلَّا المُدْيَةَ»


Bukhari-6768

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6768. ‘உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.57

Book :86


«لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ»


Bukhari-6766

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

வேறொருவரை தன் தந்தை என வாதிடுகின்றவன்.56

6766. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.

‘தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே – தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.

Book : 86


«مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»


Bukhari-6765

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

கிறிஸ்தவ அடிமை மற்றும் பின்விடுதலை அளிக்கப்பட்ட (முகாதப்) கிறிஸ்தவ அடிமை ஆகியோருக்கு வாரிசாகும் உரிமை யாருக்கு உண்டு என்பது பற்றியும், (தமக்குப் பிறந்த குழந்தையை) தம்முடையதல்ல’ என்று மறுப்பவருக்குரிய பாவம் பற்றியும்.54

பாடம் : 28

(ஒருவர் மற்றொருவரை) சகோதரன் என்றோ, சகோதரன் மகன் என்றோ வாதிடுவது.

6765. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வாக்கஸ் (ரலி) அவர்களும் அப்து இப்னு ஸம்ஆ (ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) ஸஅத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் மகன், இவன் தம் மகன் (எனவே இவனைப் பிடித்து வர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்!’ என்று கூறினார்கள்.

அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன்,

اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلاَمٍ، فَقَالَ سَعْدٌ: هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ، انْظُرْ إِلَى شَبَهِهِ، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ، فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ» قَالَتْ: فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ


Bukhari-6764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமுக்கோ வாரிசாக மாட்டார்.51

(முஸ்லிமான தந்தை இறந்த போது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்லிமானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52

6764. ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்  ‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

என உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

Book : 86


«لاَ يَرِثُ المُسْلِمُ الكَافِرَ وَلاَ الكَافِرُ المُسْلِمَ»


Bukhari-6763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

(எதிரிகளால்) சிறை பிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை.49

(பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்து வந்தார்கள். மேலும், (மற்றவர்களை விட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை என்று கூறுவார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத்தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடிவடிக்கைகள் ஆகியவற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும்வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில் தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.

6763. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களை விட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எம்முடைய பொறுப்பாகும்.

«مَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلًّا فَإِلَيْنَا»


Bukhari-6761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

6761. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

‘ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே’ என்றோ, ‘இதைப் போன்றோ’இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.48

Book : 86


«مَوْلَى القَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» أَوْ كَمَا قَالَ


Bukhari-6760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6760. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»


Bukhari-6758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.

எனவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, ‘அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.

என அஸ்வத் (ரஹ்) அறிவித்தார்.46

Book :86


اشْتَرَيْتُ بَرِيرَةَ، فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا. فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّ الوَلاَءَ لِمَنْ أَعْطَى الوَرِقَ» قَالَتْ: فَأَعْتَقْتُهَا. قَالَتْ: فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا، فَقَالَتْ: لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا بِتُّ عِنْدَهُ، فَاخْتَارَتْ نَفْسَهَا قَالَ: وَكَانَ زَوْجُهَا حُرًّا


Next Page » « Previous Page