Author: Farook

Bukhari-6747

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

இரத்த பந்துக்கள் 34

6747. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் விளக்கமாவது:

முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் (-தவுல் அர்ஹாம்) அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பரே) வாரிசாகி வந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) இந்த வசனத்தின் முதல் தொடர் இறங்கியபோது, அது இரண்டாவது தொடரை மாற்றிவிட்டது.35

Book : 86


{وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} [النساء: 33] (وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ) قَالَ: ” كَانَ المُهَاجِرُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَرِثُ الأَنْصَارِيُّ المُهَاجِرِيَّ دُونَ ذَوِي رَحِمِهِ، لِلْأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمْ، فَلَمَّا نَزَلَتْ: {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} [النساء: 33] ” قَالَ: ” نَسَخَتْهَا: (وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ)


Bukhari-6746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6746. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆன் நிர்ணயித்துள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் எடுத்தது போக எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.33

Book :86


«أَلْحِقُوا الفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا تَرَكَتِ الفَرَائِضُ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ»


Bukhari-6745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

(இறந்துபோன ஒரு பெண்ணுக்குத்) தந்தையின் சகோதரர் புதல்வர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் (அவளுடைய) தாய் வழிச் சகோதரர் ஆவார். மற்றொருவர் (அவளுடைய) கணவர் ஆவார். (இவர்களிடையே அவள் விட்டுச் சென்ற சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும்?)31

கணவருக்கு (அவளுடைய சொத்தில்) பாதியும், தாய் வழிச் சகோதரருக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும். எஞ்சியிருப்பது அவர்கள் இருவரிடையே சரி பாதியாகப் பங்கிடப்படும் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.32

6745. இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, செல்வத்தை விட்டுவிட்டு இறந்தவரின் செல்வம் (அவருடைய) தந்தை வழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குரியதாகும். (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள், சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றை விட்டுச் செல்கிறவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 86


«أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ مَاتَ وَتَرَكَ مَالًا فَمَالُهُ لِمَوَالِي العَصَبَةِ، وَمَنْ تَرَكَ كَلًّا أَوْ ضَيَاعًا فَأَنَا وَلِيُّهُ، فَلِأُدْعَى لَهُ»


Bukhari-6744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

(நபியே!) கலாலா’ (-அதாவது மூலவாரிசுகளோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலை-) குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்.

(அவர்களிடம்) கூறுக: கலாலா’ தொடர்பாக அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி கிடைக்கும்.

குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசாவான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரு பாகம் கிடைக்கும்.

சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும். நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கிக் கூறுகின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் (எனும் 4:176ஆவது இறைவசனம்).

6744.  Read More »

Bukhari-6743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

6743. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (என்னை நலம் விசாரிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கசுத்தி செய்தார்கள். பிறகு தாம் அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது தெளித்து விட்டார்கள். உடனே நான் விழித்தெழுந்தேன். (அல்லது குணமடைந்தேன்.)

அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருக்கின்றனர். (என் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும்?)’ என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம்: 86


دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَرِيضٌ، فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ نَضَحَ عَلَيَّ مِنْ وَضُوئِهِ فَأَفَقْتُ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِي أَخَوَاتٌ، فَنَزَلَتْ آيَةُ الفَرَائِضِ


Bukhari-6742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6742. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ‘(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இச்சொத்து விஷயத்தில் ‘நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்’

அல்லது ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று சொல்லிவிட்டு ‘(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்’ என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27

Book :86


لَأَقْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «للاِبْنَةِ النِّصْفُ، وَلِابْنَةِ الِابْنِ السُّدُسُ، وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ»


Bukhari-6741

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும் போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை.25

6741. அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், ‘(சொத்தில்) பாதி இறந்தவரின்) மகளுக்கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் இப்னு மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்’ என்று காணப்படுகின்றது. ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்’ என்ற குறிப்பு இடம் பெறவில்லை. 26

Book : 86


قَضَى فِينَا مُعَاذُ بْنُ جَبَلٍ، عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النِّصْفُ لِلاِبْنَةِ وَالنِّصْفُ لِلْأُخْتِ»


Bukhari-6740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

(இறந்தவருக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது மனைவி, (அல்லது) கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

6740. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், நஷ்டஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார். எனவே, (அவர் சார்பாக) அவரின் தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவரின் சொத்து அவரின் ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24

Book : 86


«قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ، ثُمَّ إِنَّ المَرْأَةَ الَّتِي قَضَى لَهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ العَقْلَ عَلَى عَصَبَتِهَا»


Bukhari-6739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

(இறந்துபோன பெண்ணுக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.

6739. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

(இறந்தவர் விட்டுச் சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) மரண சாசனம் செய்திருக்க வேண்டும் என்றிருந்தது. இதில் அல்லாஹ் தான் நாடியதை மாற்றியமைத்து, ‘ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கு’ என்ற விகிதத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான். (குழந்தை இருக்கும்போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாதபோது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாதபோது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும்போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.23

Book : 86


«كَانَ المَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلْأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبُعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ»


Bukhari-6738

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6738. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும்விடச்) ‘சிறந்தது’ அல்லது ‘நல்லது’ என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூ பக்ர்(ரலி) அவர்கள் தான், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை ‘தந்தையின் இடத்தில் வைத்தார்கள்’ அல்லது ‘தந்தை’ எனத் தீர்ப்பளித்தார்கள்.22

Book :86


أَمَّا الَّذِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ هَذِهِ الأُمَّةِ خَلِيلًا لاَتَّخَذْتُهُ، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، أَوْ قَالَ: خَيْرٌ، فَإِنَّهُ أَنْزَلَهُ أَبًا، أَوْ قَالَ: قَضَاهُ أَبًا


Next Page » « Previous Page