Author: Farook

Bukhari-6592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6592. ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) அறிவித்தார்.

‘ (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத்(ரலி) அவர்கள் என்னிடம் ‘அதன் கோப்பைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள் ‘(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்’ என (நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள்.

Book :81


«حَوْضُهُ مَا بَيْنَ صَنْعَاءَ وَالمَدِينَةِ» فَقَالَ لَهُ المُسْتَوْرِدُ: أَلَمْ تَسْمَعْهُ قَالَ: الأَوَانِي؟ قَالَ: لاَ، قَالَ المُسْتَوْرِدُ: «تُرَى فِيهِ الآنِيَةُ مِثْلَ الكَوَاكِبِ»


Bukhari-6591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6591. ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்’ என்று கூறினார்கள்.

Book :81


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ الحَوْضَ فَقَالَ: «كَمَا بَيْنَ المَدِينَةِ وَصَنْعَاءَ»


Bukhari-6590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6590. உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆம்விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்றார்கள். 157

Book :81


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا، فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى المَيِّتِ، ثُمَّ انْصَرَفَ عَلَى المِنْبَرِ، فَقَالَ: «إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ، أَوْ مَفَاتِيحَ الأَرْضِ، وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»


Bukhari-6589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6589. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸ்ர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்.156

என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

Book :81


«أَنَا فَرَطُكُمْ عَلَى الحَوْضِ»


Bukhari-6588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6588. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :81


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»


Bukhari-6587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6587. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் ‘எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்றேன். அவர் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்’ என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் ‘(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். அவர் ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்’

بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، فَقُلْتُ: أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: وَمَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى. ثُمَّ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، قُلْتُ أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: مَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى، فَلاَ أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ


Bukhari-6586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான்.

இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஷுஐப் இப்னு அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்’ என்றும், அறிவிப்பாளர் உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Read More »

Bukhari-6585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :81


يَرِدُ عَلَيَّ يَوْمَ القِيَامَةِ رَهْطٌ مِنْ أَصْحَابِي، فَيُحَلَّئُونَ عَنِ الحَوْضِ، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى


Bukhari-6584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6584. (அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் ‘இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்’ ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’ என்று நான் கூறுவேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று சொல்லப்படும். உடனே நான் ‘எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள்.

Read More »

Bukhari-6583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنِّي فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، مَنْ مَرَّ عَلَيَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، لَيَرِدَنَّ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ»


Next Page » « Previous Page