Author: Farook

Bukhari-6562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6562. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும்.

என நுஅமான் இப்னு பஷீர் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ رَجُلٌ، عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِي المِرْجَلُ وَالقُمْقُمُ»


Bukhari-6561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6561. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும்.

என நுஅமான் இப்னு பஷீர் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ لَرَجُلٌ، تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَةٌ، يَغْلِي مِنْهَا دِمَاغُهُ»


Bukhari-6560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6560. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் ‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்’ என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களி மண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அந்த வித்து (விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா?

என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். 136

Book :81


إِذَا دَخَلَ أَهْلُ الجَنَّةِ الجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، يَقُولُ اللَّهُ: مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ، فَيَخْرُجُونَ قَدْ امْتُحِشُوا وَعَادُوا حُمَمًا، فَيُلْقَوْنَ فِي نَهَرِ الحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ – أَوْ قَالَ: حَمِيَّةِ السَّيْلِ – ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ تَرَوْا أَنَّهَا تَنْبُتُ صَفْرَاءَ مُلْتَوِيَةً»


Bukhari-6559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6559. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் ‘ஜஹன்னா மிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

Book :81


يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بَعْدَ مَا مَسَّهُمْ مِنْهَا سَفْعٌ، فَيَدْخُلُونَ الجَنَّةَ، فَيُسَمِّيهِمْ أَهْلُ الجَنَّةِ: الجَهَنَّمِيِّينَ


Bukhari-6558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6558. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘பரிந்துரையால் (நரகவாசிகளில் சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் ‘ஸஅரீர்’ போன்று இருப்பார்கள்’ என்று கூறினார்கள். 135

அறிவிப்பாளர் ஹம்மாத் இப்னு ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ‘ஸஆரீர்’ என்றால் என்ன? என்று அறிவிப்பாளர் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அன்னார் ‘வெள்ளரிப் பிஞ்சுகள்’ என்று பதிலளித்தார்கள். அன்னாருக்குப் பல் விழுந்துவிட்டிருந்தது. (இதனால் ‘ஷஆரீர்’ என்பதை ‘ஸஆரீர்’என்று உச்சரித்தார்கள்.) மேலும், ‘பரிந்துரையால் (சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று ஜாபிர்(ரலி) அவர்கள் உங்களிடம் கூறினார்களா? என அம்ர் இப்னு தீனார் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

Book :81


«يَخْرُجُ مِنَ النَّارِ بِالشَّفَاعَةِ كَأَنَّهُمُ الثَّعَارِيرُ»، قُلْتُ: مَا الثَّعَارِيرُ؟ قَالَ: «الضَّغَابِيسُ، وَكَانَ قَدْ سَقَطَ فَمُهُ» فَقُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ: أَبَا مُحَمَّدٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَخْرُجُ بِالشَّفَاعَةِ مِنَ النَّارِ» قَالَ: نَعَمْ


Bukhari-6557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6557. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார்.

அப்போது அல்லாஹ் ‘நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!’ என்று கூறுவான்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். 134

Book :81


يَقُولُ اللَّهُ تَعَالَى لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَقُولُ: أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا، وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ: أَنْ لاَ تُشْرِكَ بِي شَيْئًا، فَأَبَيْتَ إِلَّا أَنْ تُشْرِكَ بِي


Bukhari-6556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6556. அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இந்த ஹதீஸை நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் ‘கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று’ எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன். 133

Book :81


أَشْهَدُ لَسَمِعْتُ أَبَا سَعِيدٍ، يُحَدِّثُ وَيَزِيدُ فِيهِ: ” كَمَا تَرَاءَوْنَ الكَوْكَبَ الغَارِبَ فِي الأُفُقِ: الشَّرْقِيِّ وَالغَرْبِيِّ


Bukhari-6555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6555. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ أَهْلَ الجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الغُرَفَ فِي الجَنَّةِ، كَمَا تَتَرَاءَوْنَ الكَوْكَبَ فِي السَّمَاءِ»


Bukhari-6554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6554. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள்.

அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை.

அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார். 132

Book :81


«لَيَدْخُلَنَّ الجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا، أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ – لاَ يَدْرِي أَبُو حَازِمٍ أَيُّهُمَا قَالَ – مُتَمَاسِكُونَ، آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا، لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ»


Bukhari-6553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6553. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது. 131

என அபூ ஸயீத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ الجَوَادَ المُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ مَا يَقْطَعُهَا»


Next Page » « Previous Page