Author: Farook

Bukhari-3257

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 சொர்க்கத்தின் வாசல்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் இரண்டு ஜோடி(பொருள்)களைச் செலவழித்தவர் சொர்க்கத்தின் வாசலிலிருந்து அழைக்கப்படுவார்.52 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.53

3257. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book : 59


«فِي الجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ، لاَ يَدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ»


Bukhari-3256

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3256. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்’ என பதிலளித்தார்கள்.
Book :59


«إِنَّ أَهْلَ الجَنَّةِ يَتَرَاءَوْنَ أَهْلَ الغُرَفِ مِنْ فَوْقِهِمْ، كَمَا يَتَرَاءَوْنَ الكَوْكَبَ الدُّرِّيَّ الغَابِرَ فِي الأُفُقِ، مِنَ المَشْرِقِ أَوِ المَغْرِبِ، لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ، قَالَ: «بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا المُرْسَلِينَ»


Bukhari-3255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3255. பராஉ (ரலி) அறிவித்தார்.

(தம் மகன்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மரணமடைந்த பொழுது நபி (ஸல்) அவர்கள், ‘பாலூட்டும் செவிலி ஒருத்தி சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்’ என்று கூறினார்கள்.
Book :59


لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ قَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»


Bukhari-3254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள்.

அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.
Book :59


«أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ، وَالَّذِينَ عَلَى آثَارِهِمْ كَأَحْسَنِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، لاَ تَبَاغُضَ بَيْنَهُمْ وَلاَ تَحَاسُدَ، لِكُلِّ امْرِئٍ زَوْجَتَانِ مِنَ الحُورِ العِينِ، يُرَى مُخُّ سُوقِهِنَّ مِنْ وَرَاءِ العَظْمِ وَاللَّحْمِ»


Bukhari-3253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3253. உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவிற்கு இடம் கிடைப்பது சூரியன் எந்த அளவு நிலப் பரப்பின் மீது உதிக்கிறதோ, எந்த அளவு நிலப் பரப்பிலிருந்து மறைகிறதோ அந்த அளவு நிலப்பரப்பை விடச் சிறந்ததாகும்.
Book :59


وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَوْ تَغْرُبُ


Bukhari-3252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3252. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால்,

‘(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ،

وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَظِلٍّ مَمْدُودٍ} [الواقعة: 30]


Bukhari-3251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3251. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا»


Bukhari-3250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3250. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
Book :59


«مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»


Bukhari-3249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3249. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் தரத்தையும் மென்மையையும் பார்த்து வியப்படையலானார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை’ என்று கூறினார்கள்.
Book :59


أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِثَوْبٍ مِنْ حَرِيرٍ فَجَعَلُوا يَعْجَبُونَ مِنْ حُسْنِهِ وَلِينِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجَنَّةِ أَفْضَلُ مِنْ هَذَا»


Bukhari-3248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3248. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) ஸஅத் இப்னு முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை’ என்று கூறினார்கள்.
Book :59


أُهْدِيَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةُ سُنْدُسٍ وَكَانَ يَنْهَى عَنِ الحَرِيرِ فَعَجِبَ النَّاسُ مِنْهَا فَقَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا»


Next Page » « Previous Page