Author: Farook

Bukhari-3267

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3267. அபூவாயில் (ரஹ்) அறிவித்தார்.

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன்.

(ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்’ என்று கூறினார்கள்.

மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்’ என்றார்கள்.
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில்

قِيلَ لِأُسَامَةَ لَوْ أَتَيْتَ فُلاَنًا فَكَلَّمْتَهُ، قَالَ: إِنَّكُمْ لَتُرَوْنَ أَنِّي لاَ أُكَلِّمُهُ إِلَّا أُسْمِعُكُمْ، إِنِّي أُكَلِّمُهُ فِي السِّرِّ دُونَ أَنْ أَفْتَحَ بَابًا لاَ أَكُونُ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلاَ أَقُولُ لِرَجُلٍ أَنْ كَانَ عَلَيَّ أَمِيرًا إِنَّهُ خَيْرُ النَّاسِ، بَعْدَ شَيْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: وَمَا سَمِعْتَهُ يَقُولُ: قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: ” يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ القِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ فَيَقُولُونَ: أَيْ فُلاَنُ مَا شَأْنُكَ؟ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَانَا عَنِ المُنْكَرِ؟ قَالَ: كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ المُنْكَرِ وَآتِيهِ “

رَوَاهُ غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ


Bukhari-3266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3266. யஃலா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்ற வண்ணம், ‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்’ – (‘மாலிக்கே!’) என்று அழைப்பார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77ம்) இறைவசனத்தை ஓதுவதை கேட்டிருக்கிறேன்.
Book :59


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى المِنْبَرِ «وَنَادَوْا يَا مَالِكُ»


Bukhari-3265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே’ என்று கேட்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’ என்றார்கள்.
Book : 59


«نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ: «فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا»


Bukhari-3264

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3264. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரலி) அவர் அறிவித்தார்கள்.
Book :59


«الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ»


Bukhari-3263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3263. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59


«الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ»


Bukhari-3262

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3262. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
Book :59


«الحُمَّى مِنْ فَوْرِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا عَنْكُمْ بِالْمَاءِ»


Bukhari-3261

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3261. அபூ ஜம்ரா அள்ளுபயீ(ரஹ்) அறிவித்தார்.

நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒரு முறை) என்னைக் காய்ச்சல் பீடித்தது. அப்போது, இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னார்கள். ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக் கொள்.

ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் தான் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்.. (அறிவிப்பாளர் ஹம்மாம்(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்:)… அல்லது ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :59


كُنْتُ أُجَالِسُ ابْنَ عَبَّاسٍ بِمَكَّةَ فَأَخَذَتْنِي الحُمَّى، فَقَالَ أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ أَوْ قَالَ بِمَاءِ زَمْزَمَ – شَكَّ هَمَّامٌ -»


Bukhari-3260

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3260. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தன் இறைவனிடம், ‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே’ என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ: رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ: نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ


Bukhari-3259

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3259. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்.
Book :59


«أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Bukhari-3258

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்.

பார்க்க இறை வசனங்கள்: 1) 78:25 2) 69:36 3)17:68 4)14:16 5)14:17 6)14:97 7)54:71 8)54:73 9)54:37 10)54:23 11)54:67 12)11:106 13)19:59 14)19:86 15)40:72 16)40:55 17) 40:35 18)3:181 19) 55:19. 

3258. அபூ தர்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (முஅத்தின் லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்ட போது), ‘வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம்’ என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘வெப்பம் தணியட்டும்’ என்று – சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும் வரை – கூறினார்கள். பிறகு, ‘தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது’ என்றார்கள்.
Book : 59


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَالَ: «أَبْرِدْ» ثُمَّ قَالَ: «أَبْرِدْ» حَتَّى فَاءَ الفَيْءُ، يَعْنِي لِلتُّلُولِ ثُمَّ قَالَ: «أَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Next Page » « Previous Page