Author: Farook

Bukhari-3237

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3237. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து ஷுஃபா, அபூஹம்ஸா, இப்னு தாவூத், அபூமுஆவியா ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

அத்தியாயம்: 59


«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ»


Bukhari-3236

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3236. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.
என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
Book :59


«رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ وَهَذَا مِيكَائِيلُ»


Bukhari-3235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3235. மஸ்ரூக்(ரலி) அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அப்படியென்றால், ‘பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது’ என்னும் (திருக்குர்ஆன் 53:8,9) இறைவசனம் எங்கே?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள்; இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். எனவேதான் அவர் அடிவானத்தையே அடைத்தார்’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَأَيْنَ قَوْلُهُ {ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى} [النجم: 9] قَالَتْ: «ذَاكَ جِبْرِيلُ كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ  الرَّجُلِ، وَإِنَّهُ أَتَاهُ هَذِهِ المَرَّةَ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَسَدَّ الأُفُقَ»


Bukhari-3234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3234. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்’ என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான்: எனினும், அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களை, அவர்களின் (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.
Book :59


«مَنْ زَعَمَ أَنَّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ، وَلَكِنْ قَدْ رَأَى جِبْرِيلَ فِي صُورَتِهِ وَخَلْقُهُ سَادٌّ مَا بَيْنَ الأُفُقِ»


Bukhari-3233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3233. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘நிச்சயமாக, அவர் தம் இரட்சகனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்’ என்னும் (திருக்குர்ஆன் 53:18) இறைவசனத்தின் பொருள்,

‘நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை – அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்’ என்பதாகும்.
Book :59


{لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الكُبْرَى} [النجم: 18]، قَالَ: «رَأَى رَفْرَفًا أَخْضَرَ سَدَّ أُفُقَ السَّمَاءِ»


Bukhari-3232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3232. அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கினார்கள்.44

அத்தியாயம் : 59


سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى. فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10] قَالَ: حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ: أَنَّهُ «رَأَى جِبْرِيلَ، لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ»


Bukhari-3231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3231. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (இது தாயிஃப் நகரம் அல்ல, ஜம்ரத்துல் அகபா என்ற இடமாகும்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு (மக்காவில்) எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை.

எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும்

أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: ” لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا


Bukhari-3230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3230. யஃலா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) ‘யா மாலிக் – மாலிக்கே! ‘உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்’ என்று (அந்தக் குற்றவாளிகள்) சப்தமிடுவார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77) இறைவசனத்தை ஓத கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதும் முறையில் (‘யா மாலிக்’ என்பதற்கு பதிலாக) ‘யா மாலி’ என்றுள்ளது’ எனக் கூறினார்கள்.
Book :59


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى المِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ} [الزخرف: 77]

قَالَ: سُفْيَانُ: فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ وَنَادَوْا يَا مَالِ


Bukhari-3229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3229. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும், அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரின் உளூ முறியாமலிருக்கும் வரை, வானவர்கள், ‘இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!’ என்று பிரார்த்தனை செய்கிறார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


إِنَّ أَحَدَكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالمَلاَئِكَةُ تَقُولُ : اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ مَا لَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ


Bukhari-3228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3228. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்), ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் – தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த் – இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது’ என்று கூறுங்கள்.

ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவருடைய சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Next Page » « Previous Page