Author: Farook

Bukhari-3125

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 போரில் கலந்து கொண்டவருக்கே போர்ச் செல்வங்கள் உரியவை.

3125. உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போல் நான் வெல்கிற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை வென்றவர்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன்.
என அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 57


«لَوْلاَ آخِرُ المُسْلِمِينَ، مَا فَتَحْتُ قَرْيَةً إِلَّا قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا، كَمَا قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ»


Bukhari-3124

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3124. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், “ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்.

வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்.

ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார்.

ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, “நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு” என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது.

(வெற்றி

غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ، فَقَالَ لِقَوْمِهِ: لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ، وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا؟ وَلَمَّا يَبْنِ بِهَا، وَلاَ أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا، وَلاَ أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلاَدَهَا، فَغَزَا فَدَنَا مِنَ القَرْيَةِ صَلاَةَ العَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، فَقَالَ لِلشَّمْسِ: إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا، فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ، فَجَمَعَ الغَنَائِمَ، فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا، فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ: إِنَّ فِيكُمْ غُلُولًا، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ، فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمُ الغُلُولُ، فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ، فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلاَثَةٍ بِيَدِهِ، فَقَالَ: فِيكُمُ الغُلُولُ، فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنَ الذَّهَبِ، فَوَضَعُوهَا، فَجَاءَتِ النَّارُ، فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الغَنَائِمَ رَأَى ضَعْفَنَا، وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا


Bukhari-3123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3123. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57


«تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلَّا الجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَاتِهِ بِأَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»


Bukhari-3122

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3122. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. (எனக்கு முந்திய இறைத்தூதர்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை). என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :57


«أُحِلَّتْ لِي الغَنَائِمُ»


Bukhari-3121

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3121. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள். என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
Book :57


«إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-3120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3120. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அதற்குப் பின் கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (ரோம, பைஸாந்தியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அதற்குப் பின் சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் இறைவழியில் செலவழிப்பீர்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57


«إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-3119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

போர்ச் செல்வங்கள் (என் சமுதாயமான) உங்களுக்கு (மட்டுமே) அனுமதிக்கப்பட்டுள்ளன என்னும் நபிமொழி.

அல்லாஹ் கூறுகிறான்:

ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். இது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்வதற்காகவும், அல்லாஹ், நேர்வழியின் பக்கம் செல்லும் பேற்றை உங்களுக்கு வழங்குவதற்காகவும் தான். (அல்குர்ஆன்: 48:20)

3119. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும், நற்பலனும், போர்ச் செல்வமும் மறுமை நாள் வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.

அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)

அத்தியாயம்: 57


«الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ الأَجْرُ، وَالمَغْنَمُ إِلَى يَوْمِ القِيَامَةِ»


Bukhari-3118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3118. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
என கவ்லா அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
Book :57


«إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-3117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3117. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57


«مَا أُعْطِيكُمْ وَلاَ أَمْنَعُكُمْ، إِنَّمَا أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ»


Bukhari-3116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3116. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகிறான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தினர், அவர்களை எதிர்ப்பவர்களின் மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதியில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைகட்டளை (மறுமை நாள்) வந்து விடும். என முஆவியா(ரலி) அறிவித்தார்.
Book :57


«مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَاللَّهُ المُعْطِي وَأَنَا القَاسِمُ، وَلاَ تَزَالُ هَذِهِ الأُمَّةُ ظَاهِرِينَ عَلَى مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ، وَهُمْ ظَاهِرُونَ»


Next Page » « Previous Page