Author: Farook

Bukhari-3115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3115. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறினார்கள்.

அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித்தோழர்கள், ‘உம்மை நாங்கள் ‘அபுல் காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்’ என்றார்.

அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். எனவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவனே’ என்று கூறினார்கள்.
Book :57


وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ، فَسَمَّيْتُهُ القَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ: لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَنَتِ الأَنْصَارُ، سَمُّوا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ»


Bukhari-3114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: போரில் உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். (8:41)

அதாவது, இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப்பாளனும் மட்டுமேயாவேன். அல்லாஹ் தான் கொடுக்கின்றான்.

3114. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

எங்களில் – அன்சாரிகளில் – ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ‘முஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் இப்னு ஃபுளாலா(ரலி)) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி(ஸல்) அவர்கள், ‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல் காசிம் என்னும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்.

மற்றோர் அறிவிப்பில் ஜாபிர் (ரலி) கூறினார் என இடம் பெற்றுள்ளதாவது:

அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’

وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا، – قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ: إِنَّ الأَنْصَارِيَّ قَالَ: حَمَلْتُهُ عَلَى عُنُقِي، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي حَدِيثِ سُلَيْمَانَ، وُلِدَ لَهُ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا -، قَالَ: «سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»، وَقَالَ حُصَيْنٌ: «بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»، قَالَ عَمْرٌو: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ سَالِمًا، عَنْ جَابِرٍ، أَرَادَ أَنْ يُسَمِّيَهُ القَاسِمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»


Bukhari-3113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 குமுஸ் (ஐந்திலொரு பங்கு நிதி) அல்லாஹ்வின் தூதருடைய (அவசரத்) தேவைகளுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் கடமையாக்கப்பட் டுள்ளது என்பதற்கான ஆதாரமும், (தம் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் திருகையில் மாவரைத்து (கடும் சிரமத்திற்குள்ளாகி) அதைத் தம்மிடம் முறையிட்டு, போர்க் கைதிகளிலிருந்து ஒரு பணியாளைக் கொடுக்கும்படி கேட்ட போது திண்ணைத் தோழர்களுக்கும் விதவைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை வழங்கி விட்டு, தம் மகள் ஃபாத்திமாவின் பிரச்சினையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டதும்.

3113. அலீ(ரலி) அறிவித்தார்.

(என் துணைவியாரான) ‘பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம்

أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ»


Bukhari-3112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3112. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அறிவித்தார்.

என் தந்தை (அலீ இப்னு அபீ தாலிப்(ரலி)), ‘இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான்(ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில் தான் ஸகாத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ளன’ என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.
Book :57


أَرْسَلَنِي أَبِي، خُذْ هَذَا الكِتَابَ، فَاذْهَبْ بِهِ إِلَى عُثْمَانَ، فَإِنَّ فِيهِ أَمْرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّدَقَةِ


Bukhari-3111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3111. இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அறிவித்தார்.

அலீ(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான்(ரலி) அவர்களின் (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்ட போதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ(ரலி) என்னிடம் ‘நீ உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்று, ‘இந்த ஏடு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ள படி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி’ என்று கூறினார்கள்.

நான் அதை எடுத்துக் கொண்டு உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது)’ என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் அதை அலீ(ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘அதை எடுத்த இடத்திலேயே வைத்து விடு’ என்று கூறினார்கள்.
Book :57


لَوْ كَانَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَاكِرًا عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَكَرَهُ يَوْمَ جَاءَهُ نَاسٌ فَشَكَوْا سُعَاةَ عُثْمَانَ، فَقَالَ لِي عَلِيٌّ: ” اذْهَبْ إِلَى عُثْمَانَ فَأَخْبِرْهُ: أَنَّهَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمُرْ سُعَاتَكَ يَعْمَلُونَ فِيهَا، فَأَتَيْتُهُ بِهَا، فَقَالَ: أَغْنِهَا عَنَّا، فَأَتَيْتُ بِهَا عَلِيًّا، فَأَخْبَرْتُهُ فَقَالَ: «ضَعْهَا حَيْثُ أَخَذْتَهَا»


Bukhari-3110

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3110. அலீ இப்னு ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதூ? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை’ என்று பதிலளித்தேன்.

மிஸ்வர்(ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும் வரை அது அவர்களிடம் சென்று சேராது’ என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி)

أَنَّهُمْ حِينَ قَدِمُوا المَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ، لَقِيَهُ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَقَالَ لَهُ: هَلْ لَكَ إِلَيَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا؟ فَقُلْتُ لَهُ: لاَ، فَقَالَ لَهُ: فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ القَوْمُ عَلَيْهِ، وَايْمُ اللَّهِ لَئِنْ أَعْطَيْتَنِيهِ، لاَ يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ، فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ، فَقَالَ: «إِنَّ فَاطِمَةَ مِنِّي، وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا»، ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ، فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ، قَالَ: «حَدَّثَنِي، فَصَدَقَنِي وَوَعَدَنِي فَوَفَى لِي، وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلًا، وَلاَ أُحِلُّ حَرَامًا، وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا»


Bukhari-3109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3109. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் ஆஸிம்(ரஹ்), ‘நான் அந்தக் குவளையக் கண்டேன். (பரக்கத்தை விரும்பி) அதில் தண்ணீர் குடித்தேன்’ என்று கூறுகிறார்கள்.
Book :57


«أَنَّ قَدَحَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ» قَالَ عَاصِمٌ: رَأَيْتُ القَدَحَ وَشَرِبْتُ فِيهِ


Bukhari-3108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3108. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, ‘இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ புர்தா(ரஹ்) கூறினார்.

ஆயிஷா(ரலி) யமன் நாட்டில் தயாரிக்கப்படுகிற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல் முலப்பதா’ (ஒட்டுப் போட்டது) என்றழைக்கிற வகையிலிருந்து ஒரு போர்வையையும் நபி(ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக் காட்டினார்கள்.
Book :57


أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كِسَاءً مُلَبَّدًا، وَقَالَتْ: فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “، وَزَادَ سُلَيْمَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ: إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِاليَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا المُلَبَّدَةَ


Bukhari-3107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3107. ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), ‘அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் காலணிகள்’ என்று அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.
Book :57


أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ «نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ»، فَحَدَّثَنِي ثَابِتٌ البُنَانِيُّ بَعْدُ، عَنْ أَنَسٍ أَنَّهُمَا «نَعْلاَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, குவளை, மோதிரம் ஆகியனவும், இவற்றில் நபியவர்களுக்குப் பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன் படுத்திய பங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர்கள் இறந்த பின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் பரக்கத் (அருள்வளம்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, செருப்பு, பாத்திரம் ஆகியனவும்.

3106. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி(ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. ‘முஹம்மது’ (என்னும் சொல்) ஒரு வரியிலும் ‘ரசூலு’ (‘தூதர்’ என்னும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹி’ (‘அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ – ‘இறைத்தூதர் முஹம்மது’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது.
Book : 57


«أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا اسْتُخْلِفَ بَعَثَهُ إِلَى البَحْرَيْنِ وَكَتَبَ لَهُ هَذَا الكِتَابَ وَخَتَمَهُ بِخَاتَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ نَقْشُ الخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ»


Next Page » « Previous Page