Author: Farook

Bukhari-3105

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, ஒருவர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கிறார்’ என்று கூறினேன்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரை இன்னார் – ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர் – என்று கருதுகிறேன்; (ஒருவரின் வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) புனித உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் புனிதமானவையாக்கி விடும்’ என்று கூறினார்கள்.
Book :57


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ إِنْسَانٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرَاهُ فُلاَنًا – لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ – الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الوِلاَدَةُ»


Bukhari-3104

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3104. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘இங்கிருந்து தான் குழப்பம் ஏற்படும்’ என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘ஷைத்தானின் கொம்பு (தலையின் ஓரப்பகுதி) எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்து…’ என்று கூறினார்கள்.
Book :57


قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا، فَأَشَارَ نَحْوَ مَسْكَنِ عَائِشَةَ، فَقَالَ: «هُنَا الفِتْنَةُ – ثَلاَثًا – مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»


Bukhari-3103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3103. ஆயிஷா(ரலி) கூறினார்.

என் அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுவார்கள்.
Book :57


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العَصْرَ، وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا»


Bukhari-3102

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3102. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) தம் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
Book :57


«ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ القِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ»


Bukhari-3101

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ، وَهُوَ مُعْتَكِفٌ فِي المَسْجِدِ، فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ بَابِ المَسْجِدِ، عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ،

فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَفَذَا، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا»، قَالاَ: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ، اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا»


Bukhari-3100

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3100. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர்த்திருந்தான்.

(எப்படியெனில்) நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் – மிஸ்வாக் – குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்து மென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்.
Book :57


تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي، وَفِي نَوْبَتِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ “، قَالَتْ: دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بِسِوَاكٍ ، «فَضَعُفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَأَخَذْتُهُ، فَمَضَغْتُهُ، ثُمَّ سَنَنْتُهُ بِهِ»


Bukhari-3099

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் பற்றி வந்துள்ள செய்திகளும், அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இல்லங்களும்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர, நுழை யாதீர்கள். (அங்கு) உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்; நீங்கள் சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்று விடுங்கள். பேச்சில் லயித்து விடாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது நபிக்கு மனவேதனையளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தினால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை.

ஆனால், அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வெட்கப்படுவதில்லை. நீங்கள் (நபியின் மனைவியரான) அவர்களிடம் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். அதுவே உங்களுடைய உள்ளங்களுக்கும், அவர்களுடைய உள்ளங்களுக்கும் தூய்மையளிப்பதாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப்

«لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ»


Bukhari-3098

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3098. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும், தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்த போது) விட்டுச் செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாக விட்டுச் சென்றார்கள்.
Book :57


«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا سِلاَحَهُ وَبَغْلَتَهُ البَيْضَاءَ، وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً»


Bukhari-3097

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3097. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது.

அத்தியாயம்: 57


«تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا فِي بَيْتِي مِنْ شَيْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلَّا شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَيَّ، فَكِلْتُهُ فَفَنِيَ»


Bukhari-3096

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு.

3096. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள். என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும், என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தருமமேயாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 57


«لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي، فَهُوَ صَدَقَةٌ»


Next Page » « Previous Page