Author: Farook

Bukhari-3034

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 161 போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல்.

இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இது பற்றியே சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

3034. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களின் மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது… மேலும், நபி(ஸல்) அவர்கள் அதிகமான முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:

இறைவா! நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்களின்

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ وَهُوَ يَنْقُلُ التُّرَابَ حَتَّى وَارَى التُّرَابُ شَعَرَ صَدْرِهِ، وَكَانَ رَجُلًا كَثِيرَ الشَّعَرِ، وَهُوَ يَرْتَجِزُ بِرَجَزِ عَبْدِ اللَّهِ

اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا … وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا … وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
إِنَّ الأَعْدَاءَ قَدْ بَغَوْا عَلَيْنَا … إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا

يَرْفَعُ بِهَا صَوْتَهُ

 


Bukhari-3033

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160 இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது.

3033. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு கஅப்(ரலி) வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள்.

இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே, ‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!’ என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்’ என்றார்கள்.
Book : 56


انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أُبَيُّ بْنُ كَعْبٍ، قِبَلَ ابْنِ صَيَّادٍ، فَحُدِّثَ بِهِ فِي نَخْلٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ، طَفِقَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَابْنُ صَيَّادٍ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا صَافِ هَذَا مُحَمَّدٌ، فَوَثَبَ ابْنُ صَيَّادٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»


Bukhari-3032

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.

3032. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?’ என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டு மென்று தாங்கள் விரும்புகிறீர்களா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘அனுமதியளித்து விட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


«مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ»، فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأْذَنْ لِي، فَأَقُولَ قَالَ: «قَدْ فَعَلْتُ»


Bukhari-3031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 158 போரில் பொய் சொல்வது.

3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்’ என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்’ என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்’ என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)’ என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு,

«مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ، فَإِنَّهُ قَدْ آذَى اللَّهَ وَرَسُولَهُ»، قَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَتَاهُ، فَقَالَ: إِنَّ هَذَا – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَدْ عَنَّانَا وَسَأَلَنَا الصَّدَقَةَ، قَالَ: وَأَيْضًا، وَاللَّهِ لَتَمَلُّنَّهُ، قَالَ: فَإِنَّا قَدِ اتَّبَعْنَاهُ فَنَكْرَهُ أَنْ نَدَعَهُ، حَتَّى نَنْظُرَ إِلَى مَا يَصِيرُ أَمْرُهُ، قَالَ: فَلَمْ يَزَلْ يُكَلِّمُهُ حَتَّى اسْتَمْكَنَ مِنْهُ فَقَتَلَهُ


Bukhari-3030

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3030. நபி(ஸல்) கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :56


«الحَرْبُ خَدْعَةٌ»


Bukhari-3029

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3029. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :56


«سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحَرْبَ خَدْعَةً»


Bukhari-3028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3028. (தொடர்ந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.)

மேலும், நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :56


وَسَمَّى الحَرْبَ خَدْعَةً»


Bukhari-3027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும்.

3027. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் (போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56


«هَلَكَ كِسْرَى، ثُمَّ لاَ يَكُونُ كِسْرَى بَعْدَهُ، وَقَيْصَرٌ لَيَهْلِكَنَّ ، ثُمَّ لاَ يَكُونُ قَيْصَرٌ بَعْدَهُ، وَلَتُقْسَمَنَّ كُنُوزُهَا فِي سَبِيلِ اللَّهِ


Bukhari-3026

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3026. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«لاَ تَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا»


Bukhari-3025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3025. பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள்.

(வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

பிறகு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

மூஸா(ரஹ்) கூறினார்:

‘நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எதிரியை (போர்க்களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்’ என்று சொன்னார்கள் என்றிருந்தது’ என சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்.
Book :56


 ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، لاَ تَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، وَسَلُوا اللَّهَ العَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»

ثُمَّ قَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ»

وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، كُنْتُ كَاتِبًا لِعُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ فَأَتَاهُ كِتَابُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ تَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ»


Next Page » « Previous Page