Author: Farook

Bukhari-3044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 169 சிறைக் கைதியைக் கட்டிப் போட்டுக் கொலை செய்வது.

3044. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்டபோது தலையில் இரும்புத் தொப்பி அணிந்த வண்ணம் மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவனைக் கொல்லுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள்.
Book : 56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ: «اقْتُلُوهُ»


Bukhari-3043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 168 எதிரிகள் ஒருவரது தீர்ப்பை ஏற்றுக் கொள்ள சம்மதித்தால்.. (தலைவர் அனுமதிக்கும் பட்சத்தில் அது செல்லும்.)

3043. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸஅத்(ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத்(ரலி) அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள்.

ஸஅத்(ரலி) வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். ஸஅத்(ரலி), ‘அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமையுள்ளவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கிறேன்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்களின் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்’ என்றார்கள்.
Book : 56


لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ هُوَ ابْنُ مُعَاذٍ، بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ قَرِيبًا مِنْهُ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى سَيِّدِكُمْ» فَجَاءَ، فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ، قَالَ: فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ المُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ، قَالَ: «لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ المَلِكِ»


Bukhari-3042

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 167 (எதிரியின் மீது அம்பெய்தபடி) இதை வாங்கிக் கொள். நான் இன்னாரின் மகன் என்று கூறுவது.

சலமா பின் அக்வஃ (ரலி) கூறினார்கள்: இதை வாங்கிக் கொள்க! நான் அக்வஃ உடைய மகன்.

3042. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.

பராஉ(ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின் வாங்கிச் சென்றுவிட்டீர்களா?’ என்று கேட்டார். நான் கேட்டுக் கொண்டிருக்க, பராஉ(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பொருத்தவரை அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை …….


سَأَلَ رَجُلٌ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: يَا أَبَا عُمَارَةَ، أَوَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ البَرَاءُ، وَأَنَا أَسْمَعُ: أَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُوَلِّ يَوْمَئِذٍ، كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ، فَلَمَّا غَشِيَهُ المُشْرِكُونَ نَزَلَ، فَجَعَلَ يَقُولُ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»، قَالَ: فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ


Bukhari-3041

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 166 எதிரியைக் கண்டவர், யா ஸபாஹா! (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழச் செய்யும் விதத்தில் உரக்கக் குர லெழுப்பி அழைப்பது.

3041. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நான் மதீனாவிலிருந்து (ங)காபாவை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன். நான் (ங)காபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் அடிமையொருவன் என்னைச் சந்தித்தான். நான், ‘அடப் பாவமே! உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டேன். அவன், ‘நபி(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன’ என்று கூறினான்.

நான், ‘அவற்றை யார் எடுத்துச் சென்றது?’ என்று கேட்டேன். அதற்கவன், ‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்’ என்று பதில் சொன்னான். உடனே நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக்கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு ‘யா ஸபாஹா! (ஆபத்து!) யா ஸபாஹா! (ஆபத்து!)’ என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன்.

அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்து நின்டிருந்தனர். அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். ‘நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள்’ என்று

خَرَجْتُ مِنَ المَدِينَةِ ذَاهِبًا نَحْوَ الغَابَةِ، حَتَّى إِذَا كُنْتُ بِثَنِيَّةِ الغَابَةِ، لَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قُلْتُ: وَيْحَكَ مَا بِكَ؟ قَالَ: أُخِذَتْ لِقَاحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: مَنْ أَخَذَهَا؟ قَالَ: غَطَفَانُ، وَفَزَارَةُ فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ أَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا: يَا صَبَاحَاهْ يَا صَبَاحَاهْ، ثُمَّ انْدَفَعْتُ حَتَّى أَلْقَاهُمْ، وَقَدْ أَخَذُوهَا، فَجَعَلْتُ أَرْمِيهِمْ،

وَأَقُولُ:
أَنَا ابْنُ الأَكْوَعِ … وَاليَوْمُ يَوْمُ الرُّضَّعْ

فَاسْتَنْقَذْتُهَا مِنْهُمْ قَبْلَ أَنْ يَشْرَبُوا، فَأَقْبَلْتُ بِهَا أَسُوقُهَا، فَلَقِيَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ القَوْمَ عِطَاشٌ، وَإِنِّي أَعْجَلْتُهُمْ أَنْ يَشْرَبُوا سِقْيَهُمْ، فَابْعَثْ فِي إِثْرِهِمْ، فَقَالَ: ” يَا ابْنَ الأَكْوَعِ: مَلَكْتَ، فَأَسْجِحْ إِنَّ القَوْمَ يُقْرَوْنَ فِي قَوْمِهِمْ


Bukhari-3039

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3039. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். ‘(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்.

நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க் களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்துவிட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களின் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் சகாக்கள், ‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று (உரக்கக்) கூறலாயினர். (

இதைக் கேட்ட) அப்துல்லாஹ்

جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ، وَكَانُوا خَمْسِينَ رَجُلًا عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، فَقَالَ: «إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ فَلاَ تَبْرَحُوا مَكَانَكُمْ، هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا القَوْمَ وَأَوْطَأْنَاهُمْ، فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ»، فَهَزَمُوهُمْ، قَالَ: فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ، قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ، رَافِعَاتٍ ثِيَابَهُنَّ، فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ: الغَنِيمَةَ أَيْ قَوْمِ الغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ: أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالُوا: وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ، فَلَنُصِيبَنَّ مِنَ الغَنِيمَةِ، فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ، فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ اثْنَيْ عَشَرَ رَجُلًا، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ أَصَابُوا مِنَ المُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً، سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلًا، فَقَالَ أَبُو سُفْيَانَ: أَفِي القَوْمِ مُحَمَّدٌ ثَلاَثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجِيبُوهُ، ثُمَّ قَالَ: أَفِي القَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ؟ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: أَفِي القَوْمِ ابْنُ الخَطَّابِ؟ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: أَمَّا هَؤُلاَءِ، فَقَدْ قُتِلُوا، فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ، فَقَالَ: كَذَبْتَ وَاللَّهِ يَا عَدُوَّ اللَّهِ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لَأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لَكَ مَا يَسُوءُكَ، قَالَ: يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالحَرْبُ سِجَالٌ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي القَوْمِ مُثْلَةً، لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ: أُعْلُ هُبَلْ، أُعْلُ هُبَلْ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُجِيبُوا لَهُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُ أَعْلَى وَأَجَلُّ “، قَالَ: إِنَّ لَنَا العُزَّى وَلاَ عُزَّى لَكُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُجِيبُوا لَهُ؟»، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ؟ قَالَ: «قُولُوا اللَّهُ مَوْلاَنَا، وَلاَ مَوْلَى لَكُمْ»


Bukhari-3038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 164 போரின் போது சச்சரவு செய்து கொள்வதும், கருத்து வேறுபாடு கொண்டு தகராறு செய்து கொள்வதும் வெறுக்கத் தக்கது என்பதும், தன் தலைவருக்கு மாறு செய்பவரின் தண்டனையும்.

அல்லாஹ் கூறுகிறான்: ஒருவரோடொருவர் (பூசல் கொண்டு) சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். (அதனால்) நீங்கள் அச்சமும் பலவீனமும் கொண்டு விடுவீர்கள். உங்கள் வலிமை (பறி) போய் விடும். (8:46)

இங்கே வலிமை என்பது போர் வலிமையைக் குறிக்கிறது என்று கதாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்’ என்று (அறிவுரை) கூறினார்கள்.
Book : 56


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى اليَمَنِ قَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا»


Bukhari-3037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 163 (ஈச்சம்) பாயை எரித்து அதனால் காயத்திற்கு சிகிச்சையளிப்பதும், ஒரு பெண் தன் தந்தையின் முகத்திலிருந்து (வழியும்) இரத்தத்தைக் கழுவுவதும், (அதற்காகத்) தண்ணீரைக் கேடயத்தில் அள்ளிச் சுமந்து வருவதும்.

3037. அபூ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘அதைப் பற்றி என்னை விட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை.

அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மேலும், ஃபாத்திமா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டார்கள். (ஈச்சம்) பாய் ஒன்று எடுத்து வரப்பட்டு, எரிக்கப்பட்டு அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதருடைய காயத்திற்கு (மருந்திட்டு)க் கட்டு போடப்பட்டது’ என்றார்கள்.
Book : 56


سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِالْمَاءِ فِي تُرْسِهِ، وَكَانَتْ – يَعْنِي فَاطِمَةَ – تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، ثُمَّ حُشِيَ بِهِ جُرْحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3036. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
Book :56


وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي، وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا»


Bukhari-3035

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 162 குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்.

3035. ஜரீர்(ரலி) அறிவித்தார்.

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
Book : 56


مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي


Next Page » « Previous Page