Author: Farook

Bukhari-3004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 138 தாய் தந்தையரின் அனுமதியுடன் அறப் போர் புரிவது.

3004. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக்கின்றனர்) என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.
Book : 56


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَهُ فِي الجِهَادِ، فَقَالَ: «أَحَيٌّ وَالِدَاكَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَفِيهِمَا فَجَاهِدْ»


Bukhari-3003

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3003. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

நான் ஒருவரை இறைவழியில் (போரிடுவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். தன்னிடம் இருந்த அந்த குதிரையை அவர் விற்றார்… அல்லது வீணாக்க இருந்தார். அதை நான் வாங்கிக் கொள்ள விரும்பினேன். அதை அவர் மலிவான ஒரு விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணினேன்.

எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று ஆலோசனை) கேட்டேன். அவர்கள், ‘அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன்’ என்று கூறினார்கள்.
Book :56


حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَابْتَاعَهُ أَوْ فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لاَ تَشْتَرِهِ وَإِنْ بِدِرْهَمٍ، فَإِنَّ العَائِدَ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ»


Bukhari-3002

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 137 ஒருவரைப் புனிதப் போருக்காக குதிரையில் ஏற்றியனுப்பிய பிறகு குதிரை விற்கப்படுவதைக் கண்டால்…

3002. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) (ஒருவரை) இறைவழியில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள். பிறகு, அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை வாங்க விரும்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘அதை வாங்கலாமா?’ என்று) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book : 56


أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تَبْتَعْهُ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ»


Bukhari-3001

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3001. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையின் ஒரு பங்காகும். அது உங்களை உறங்க விடாமலும், உண்ண விடாமலும், பருக விடாமலும் தடுத்து விடும். எனவே, உங்களில் ஒருவர் (ஒரு வேலையாகப் பயணம் புறப்பட்டுச் சென்று) தன் தேவையை முடித்துக் கொண்டால் அவர் தன் வீட்டாரிடம் விரைவாக (திரும்பிச்) சென்று விடட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«السَّفَرُ قِطْعَةٌ مِنَ العَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ، فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ»


Bukhari-3000

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3000. அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து அபீ உபைத்(ரலி) கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது.

உடனே, அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள். கீழ் வானில் தெரியும் செம்மை மறைந்துவிட்ட பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும் போது மக்ரிபைப் பிற்படுத்தி, மக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book :56


كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ، فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى إِذَا كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ، ثُمَّ نَزَلَ، فَصَلَّى المَغْرِبَ وَالعَتَمَةَ يَجْمَعُ بَيْنَهُمَا، وَقَالَ: «إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ المَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا»


Bukhari-2999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 136 பயணத்தில் (இருந்து) விரைவாக (வீடு திரும்பிச்) செல்வது.

நபி (ஸல்) அவர்கள், நான் மதீனாவுக்கு (அவசரமாக) விரைந்து சென்று கொண்டிருக்கின்றேன். எவர் என்னுடன் விரைவாக வர விரும்புகின்றாரோ அவர் விரைந்து வரட்டும் என்று கூறினார்கள். இதை அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2999. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் ‘ஹஜ்ஜத்துல் வதா’வின்போது (அரஃபாவிலிருந்து திரும்பி வருகையில்) நபி(ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் சாதாரண வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் வேக வேகமாகச் செல்வார்கள்’ என்று பதிலளித்து விடடு, ‘வேகமாக’ என்பது சாதாரண வேகத்தை விட அதிகமாக உள்ள வேகத்தைக் குறிக்கும்’ என்று உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் யஹ்யா அல் கத்தான்(ரஹ்), ‘எனக்கு இதை அறிவித்த உர்வா(ரஹ்), ‘நான் உஸாமா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள்: ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்து விட்டேன்’ என்று கூறினார்கள்.
Book : 56


سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا – كَانَ يَحْيَى يَقُولُ وَأَنَا أَسْمَعُ فَسَقَطَ عَنِّي – عَنْ مَسِيرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، قَالَ: «فَكَانَ يَسِيرُ العَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ وَالنَّصُّ فَوْقَ العَنَقِ»


Bukhari-2998

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2998. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கிற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :56


«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الوَحْدَةِ مَا أَعْلَمُ، مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ»


Bukhari-2997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 135 (இரவில்) தனியாகப் பயணம் செல்லலாமா?

2997. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது (‘இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருவது யார்?’ என்று மக்களை) அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்’ என்று கூறினார்கள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹவாரீ’ என்பது உதவி புரிபவரைக் குறிக்கும்’ என்று கூறினார்கள்.
Book : 56


نَدَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ يَوْمَ الخَنْدَقِ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَحَوَارِيَّ الزُّبَيْرُ» قَالَ سُفْيَانُ: الحَوَارِيُّ: النَّاصِرُ


Bukhari-2996

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 134

ஊரிலிருக்கும் போது ஒருவர் செய்து வந்த நற்செயல்களுக்குக் கிடைத்தது போன்ற (அதே) நற்பலன், அவர் பிரயாணத்தில் இருக்கும் போதும் (பாவம் எதுவும் செய்யவில்லையென்றால்) அவருக்கு எழுதப்படும்.

2996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.

இதை அறிவித்த அபூபுர்தா (ரஹ்), ‘இதைப் பலமுறை (என் தந்தை) அபூமூஸா அஷ்அரீ (ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் பின் அபூகப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

அத்தியாயம்: 56


سَمِعْتُ أَبَا بُرْدَةَ، وَاصْطَحَبَ هُوَ وَيَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ فِي سَفَرٍ، فَكَانَ يَزِيدُ يَصُومُ فِي السَّفَرِ، فَقَالَ لَهُ أَبُو بُرْدَةَ: سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرِضَ العَبْدُ، أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا»


Bukhari-2995

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2995. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ… அல்லது புனிதப் போரிலிருந்தோ திரும்பும் போது, ஒரு மலைப்பாதையில் அல்லது ஒரு கெட்டியான நிலத்தில் மேடான பகுதியில் ஏறிச் செல்லும் போதெல்லாம் மூன்று முறை, ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள்.

பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம் பணிந்தவர்களாகவும், நாங்கள் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவினான்; தன்னந்தனியாக நின்று, குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
Book :56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَفَلَ مِنَ الحَجِّ أَوِ العُمْرَةِ – وَلاَ أَعْلَمُهُ إِلَّا قَالَ الغَزْوِ – يَقُولُ كُلَّمَا أَوْفَى عَلَى ثَنِيَّةٍ أَوْ فَدْفَدٍ: كَبَّرَ ثَلاَثًا، ثُمَّ قَالَ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ»، قَالَ صَالِحٌ فَقُلْتُ لَهُ: أَلَمْ يَقُلْ عَبْدُ اللَّهِ إِنْ شَاءَ اللَّهُ؟ قَالَ: لاَ


Next Page » « Previous Page