Author: Farook

Bukhari-2994

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 133 மேட்டில் ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவது.

2994. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவோம்.
Book : 56


«كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا»


Bukhari-2993

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 132

பள்ளத்தாக்கில் இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்று சொல்வது.

2993. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்’ என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.

அத்தியாயம்: 56


«كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا»


Bukhari-2992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 131

தக்பீர் சொல்லும் போது குரலை உயர்த்திச் சொல்வது விரும்பத் தக்கதல்ல.

2992. அபூமூஸா அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்றும் ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்றும் கூறி வந்தோம்.

(ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 56


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ، هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّهُ مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ، تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ»


Bukhari-2991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 130 போரின் போது தக்பீர் சொல்வது.

2991. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்’ என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்’ என்று கூறினார்கள்.

எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்’ என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.
Book : 56


صَبَّحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي عَلَى أَعْنَاقِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا: هَذَا مُحَمَّدٌ، وَالخَمِيسُ مُحَمَّدٌ، وَالخَمِيسُ، فَلَجَئُوا إِلَى الحِصْنِ، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ، فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ»، وَأَصَبْنَا حُمُرًا، فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الحُمُرِ، فَأُكْفِئَتْ القُدُورُ بِمَا فِيهَا تَابَعَهُ عَلِيٌّ، عَنْ سُفْيَانَ، رَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ


Bukhari-2990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 129 எதிரியின் நாட்டிற்கு திருக்குர்ஆன் பிரதிகளுடன் பிரயாணம் செய்வது விரும்பத் தக்கதல்ல.

இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்படித் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பு வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களும் அவர் களுடைய தோழர்களும் திருக்குர்ஆனை அறிந்திருக்கும் நிலையில் எதிரியின் நாட்டில் பிரயாணம் செய்துள்ளனர்.

2990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுடன் (திருக்குர்ஆனின் பிரதியுடன்) எதிரியின் நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.
Book : 56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُسَافَرَ بِالقُرْآنِ إِلَى أَرْضِ العَدُوِّ


Bukhari-2989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 128

ஒருவர் ஏறி அமர உதவியாக வாகனத்தைப் பிடித்துக் கொள்வது முதலான நற்செயல்கள்.

2989. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும்.

நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56


«كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»


Bukhari-2988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2988. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் கஅபாவின் காவல் பொறுப்பில் இருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது.

நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உஸாமா(ரலி), பிலால்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள்.

மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நானே (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால்(ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே, பிலால்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?’ என்று கேட்டேன். பிலால்(ரலி), நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம்,

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ يَوْمَ الفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ، وَمَعَهُ بِلاَلٌ، وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ مِنَ الحَجَبَةِ، حَتَّى أَنَاخَ فِي المَسْجِدِ، فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ البَيْتِ فَفَتَحَ، وَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أُسَامَةُ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ، فَمَكَثَ فِيهَا نَهَارًا طَوِيلًا، ثُمَّ خَرَجَ»، فَاسْتَبَقَ النَّاسُ، وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ، فَوَجَدَ بِلاَلًا وَرَاءَ البَابِ قَائِمًا، فَسَأَلَهُ ” أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَأَشَارَ لَهُ إِلَى المَكَانِ الَّذِي صَلَّى فِيهِ قَالَ عَبْدُ اللَّهِ: فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ


Bukhari-2987

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 127 கழுதையின் மீது ஒருவரைத் தமக்குப் பின்னே உட்கார வைத்துக் கொள்வது.

2987. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்தார்கள். கழுதையின் சேண இருக்கையின் மீதிருந்த பூம்பட்டு விரிப்பொன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்தினார்கள்.
Book : 56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَكِبَ عَلَى حِمَارٍ عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ»


Bukhari-2986

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75 (புனிதப் போருக்காக) கடல் பயணம் செய்தல்.

2986. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் (வாகனத்தில் அவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது மக்கள் (நபித் தோழர்கள்) ஹஜ், உம்ரா இரண்டுக்குமே உரக்க ‘தல்பியா’ கூறிக் கொண்டிருந்தார்கள்.
Book : 56


«كُنْتُ رَدِيفَ أَبِي طَلْحَةَ وَإِنَّهُمْ لَيَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا الحَجِّ وَالعُمْرَةِ»


Bukhari-2985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2985. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்களை வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு, ‘தன்யீம்’ என்னுமிடத்திலிருந்து அவர்களை உம்ரா செய்ய அழைத்துச் செல்லும்படி நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Book :56


حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ


Next Page » « Previous Page