Author: Farook

Bukhari-2933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2933. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது இணை வைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே!

இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’ என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
Book :56


دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الأَحْزَابِ عَلَى المُشْرِكِينَ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اللَّهُمَّ اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»


Bukhari-2932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2932. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஸுப்ஹுத் தொழுகையில்) குனூத் ஓதும்போது, ‘இறைவா! ஸலமா இப்னு ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! உன் (தண்டனைப்) பிடிகளை முளர் குலத்தாரின் மீது (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!’ யூசுஃப்(அலை) அவர்களின் காலத்து (எகிப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் சில ஆண்டுகளை (தண்டனையாக) அளிப்பாயாக!’ என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
Book :56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي القُنُوتِ «اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِيِّ يُوسُفَ»


Bukhari-2931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 98

இணைவைப்போருக்குத் தோல்வியும், நில நடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது.

2931. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும், புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 56


لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ  الوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ»


Bukhari-2930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97 தோல்வியின் போது தன் தோழர்களை அணிவகுத்து நிற்கச் செய்து, தன் வாகனத்திலிருந்து இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோருவது.

2930. அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

பராஉ (ரலி) அவர்களிடம் ஒருமனிதர் அபூ உமாராவே! நீஙகள் ஹுனைன் போரின் போது பின்வாங்கி ஓடினீர்களா என்று கேட்க, அதற்கு அவர்கள், இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை.

ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுத பலம் இல்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுத பாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்துச் சென்றனர். அவர்களுடைய எந்த அம்பும் இலக்குத் தவறி விழுவதில்லை. அவர்கள் குறித் தவறாமல் அம்புகளை எய்தார்கள்.

ஆகவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கி சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூசுஃப்யான் பின் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஒட்டிக் கொண்டு வர அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

(செய்தி அறிந்ததும் அதை விட்டு,) இறங்கி அல்லாஹ்விடம் உதவிக் கோரி பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் இறைத்தூதர் தான் இது பொய் அல்ல. நான்

سَمِعْتُ البَرَاءَ، وَسَأَلَهُ رَجُلٌ أَكُنْتُمْ فَرَرْتُمْ يَا أَبَا عُمَارَةَ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لاَ وَاللَّهِ، مَا وَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ، وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ بِسِلاَحٍ، فَأَتَوْا قَوْمًا رُمَاةً، جَمْعَ هَوَازِنَ، وَبَنِي نَصْرٍ، مَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ، فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ، فَأَقْبَلُوا هُنَالِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَابْنُ عَمِّهِ أَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ يَقُودُ بِهِ، فَنَزَلَ وَاسْتَنْصَرَ، ثُمَّ قَالَ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»، ثُمَّ صَفَّ أَصْحَابَهُ


Bukhari-2929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96 முடியாலான செருப்பை அணிபவர்களுடன் போர் புரிவது.

2929. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முடியாலான செருப்புகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடாத வரை இறுதி நாள் ஏற்படாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றொரு வழியாக அறிவிக்கப்படுகிற ஓர் அறிவிப்பில், (‘தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன்’ என்னும் வாசகத்திற்கு முன்னால்).. ‘சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட’ என்னும் சொற்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன.                                                                                Book : 56


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»، قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً: «صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمْ، المَجَانُّ المُطْرَقَةُ»


Bukhari-2928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2928. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ، صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ»


Bukhari-2927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்.

2927. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முடியாலான செருப்புகளை அணிகிற ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுதல் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார்.
Book : 56


«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»


Bukhari-2926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2926. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ச

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்:56


لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ


Bukhari-2925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 94

யூதர்களுடன் போரிடுதல்.

2925. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், ‘அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனைக் கொன்று விடு’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 56


تُقَاتِلُونَ اليَهُودَ، حَتَّى يَخْتَبِيَ أَحَدُهُمْ وَرَاءَ الحَجَرِ، فَيَقُولُ: يَا عَبْدَ اللَّهِ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي، فَاقْتُلْهُ


Bukhari-2924

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 93 ரோமர்களுடன் போரிடுதல் பற்றி……

2924. உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸீ(ரஹ்) அறிவித்தார்.

உபாதா இப்னு ஸாமித்(ரலி) ‘ஹிம்ஸ்’ கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்தினார்கள்’ என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று கூறினார்கள். ‘அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِي سَاحَةِ حِمْصَ وَهُوَ فِي بِنَاءٍ لَهُ، وَمَعَهُ أُمُّ حَرَامٍ – قَالَ: عُمَيْرٌ، فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ: أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ البَحْرَ قَدْ أَوْجَبُوا»، قَالَتْ أُمُّ حَرَامٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ؟ قَالَ: «أَنْتِ فِيهِمْ»، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ»، فَقُلْتُ: أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ»


Next Page » « Previous Page