Author: Farook

Bukhari-2892

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 73

இறைவழியில் ஒருநாள் எல்லை யைக் காவல் காப்பதன் சிறப்பு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; பொறுமையில் (எதிரிகளையும்) விஞ்சி விடுங்கள்; (எதிரியிடம்) விழிப்போடு இருங்கள்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றியாளர்களாகத் திகழலாம். (3:200)

2892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில், ஒரு சாட்டை வைக்கு மளவுக்கு இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். ஓர் அடியார் இறைவழியில் (அறப்போரில்) செல்கின்ற மாலை நேரம், அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும்.

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 56


«رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا»


Bukhari-2891

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72

பயணத்தில் அடுத்தவரின் பொருள் களைச் சுமப்பவரின் சிறப்பு.

2891. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 56


«كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ، يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ، يُحَامِلُهُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ، وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ»


Bukhari-2890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2890. அனஸ் (ரலி) அறிவித்தார்.

(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.

நோன்பு நோற்காமல் விட்டு விட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்’ என்று கூறினார்கள்.
Book :56


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَكْثَرُنَا ظِلًّا الَّذِي يَسْتَظِلُّ بِكِسَائِهِ، وَأَمَّا الَّذِينَ صَامُوا فَلَمْ يَعْمَلُوا شَيْئًا، وَأَمَّا الَّذِينَ أَفْطَرُوا فَبَعَثُوا الرِّكَابَ وَامْتَهَنُوا وَعَالَجُوا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَهَبَ المُفْطِرُونَ اليَوْمَ بِالأَجْرِ»


Bukhari-2889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2889. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்.

கைபர் போரின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துக் கொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உஹுது மலை தென்பட்டதும் இது எத்தகைய மலையென்றால் இது நம்மை நேசிக்கின்றது. நாம் இதை நேசிக்கின்றோம் என்று கூறினார்கள்.

பின்னர் மதீனாவை நோக்கித் தம் கரத்தால் சைகை செய்து இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று நான் (இந்த) இரு மலைகளுக்கிடையேயுள்ள நிலப்பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், முத்துகளிலும் எங்களுக்கு பரக்கத்தைக் கொடு என்று பிரார்த்தித்தார்கள்
Book :56


خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَى خَيْبَرَ أَخْدُمُهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَاجِعًا وَبَدَا لَهُ أُحُدٌ، قَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ» ثُمَّ أَشَارَ بِيَدِهِ إِلَى المَدِينَةِ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا، كَتَحْرِيمِ إِبْرَاهِيمَ مَكَّةَ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا»


Bukhari-2888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 71

புனிதப் போரில் பணிவிடை செய்வதின் சிறப்பு.

2888. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்கு பணிவிடை செய்து வந்தார்கள். (வேண்டாம் என நான் மறுத்த போது)  “அன்ஸாரிகள் (நபி-ஸல்-அவர்களுக்கு பணிவிடை செய்தல் என்ற) ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் அவர்களுக்கு பணிவிடைகள் செய்து அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை”. என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

அத்தியாயம்: 56


«صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَكَانَ يَخْدُمُنِي وَهُوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ» قَالَ جَرِيرٌ: «إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيْئًا، لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلَّا أَكْرَمْتُهُ»


Bukhari-2887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2887. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் துர்பாக்கியவானாகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்.

இறைவழியில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரண்டு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கிற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்;

பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)

அத்தியாயம்: 56


«تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَعَبْدُ الدِّرْهَمِ، وَعَبْدُ الخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ سَخِطَ، تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ، طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ، مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الحِرَاسَةِ، كَانَ فِي الحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ»،

وَقَالَ : فَتَعْسًا: كَأَنَّهُ يَقُولُ: فَأَتْعَسَهُمُ اللَّهُ،

طُوبَى: فُعْلَى مِنْ كُلِّ شَيْءٍ طَيِّبٍ، وَهِيَ يَاءٌ حُوِّلَتْ إِلَى الوَاوِ وَهِيَ مِنْ يَطِيبُ


Bukhari-2886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2886. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ»


Bukhari-2885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரியும் வேளையில் காவல் காப்பது.

2885. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே’ என்று கூறினார்கள்.

அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்’ என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.
Book : 56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَهِرَ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ، قَالَ: «لَيْتَ رَجُلًا مِنْ أَصْحَابِي صَالِحًا يَحْرُسُنِي اللَّيْلَةَ»، إِذْ سَمِعْنَا صَوْتَ سِلاَحٍ، فَقَالَ: «مَنْ هَذَا؟»، فَقَالَ: أَنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ جِئْتُ لِأَحْرُسَكَ، وَنَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 உடலில் இருந்து அம்பைப் பிடுங்கி எடுப்பது.

2884. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதரர் அபூ ஆமிர்(ரலி) அவர்களின் முழங்காலருகில் அம்பு துளைத்து (அதிலேயே தங்கி) விட்டிருந்தது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘இந்த அம்பைப் பிடுங்கி விடு’ என்று கூறினார்கள்.

நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! உபைத் அபூ அமீருக்கு மன்னிப்பளி’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 56


رُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ، قَالَ: انْزِعْ هَذَا السَّهْمَ، فَنَزَعْتُهُ فَنَزَا مِنْهُ المَاءُ، فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ»


Bukhari-2883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 68 காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பெண்கள் எடுத்து வருதல்.

2883. ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வோம்; அப்போது (போரில் காயமுற்ற) மக்களுக்கு நீர் புகட்டுவோம்; அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம்; கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் திரும்பக் கொண்டு வருவோம்.
Book : 56


«كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَسْقِي القَوْمَ، وَنَخْدُمُهُمْ، وَنَرُدُّ الجَرْحَى وَالقَتْلَى إِلَى المَدِينَةِ»


Next Page » « Previous Page