Author: Farook

Bukhari-2882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 புனிதப் போரில் காயமுற்றவர்களுக்குப் பெண்கள் மருந்திடுவது.

2882. ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார்.

(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.
Book : 56


«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْقِي وَنُدَاوِي الجَرْحَى، وَنَرُدُّ القَتْلَى إِلَى المَدِينَةِ»


Bukhari-2881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 புனிதப் போரில் பெண்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை மக்களிடம் சுமந்து செல்வது.

2881. சஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) கூறினார்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களிடையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி மீதமாயிற்று. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைஉங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய மகளுக்குக் கொடுங்கள்’ என்று கூறினார்கள் – அவர்கள் அலீ(ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்.

(உமர்(ரலி), ‘உம்மு சுலைத்(ரலி) தாம் இதற்கு மிகவும் அருகதையுடையவர்கள். உம்மு சுலைம்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்’ என்று கூறிவிட்டு, ‘அவர் உஹுதுப் போரின்போது எங்களுக்காக (இஸ்லாமிய வீரர்களுக்காக) தோல் பைகளைச் சுமந்து நீர் புகட்டுபவராய் இருந்தார்’ என்று கூறினார்கள்.
Book : 56


إِنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ المَدِينَةِ، فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ، فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي عِنْدَكَ، يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ، فَقَالَ عُمَرُ: «أُمُّ سَلِيطٍ أَحَقُّ، وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ عُمَرُ: «فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا القِرَبَ يَوْمَ أُحُدٍ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” تَزْفِرُ: تَخِيطُ


Bukhari-2880

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65 பெண்கள், ஆண்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வது.

2880. அனஸ்(ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டு விட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்ற போது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள்.

நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
‘தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று’ என்பதற்கு பதிலாக, ‘தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று’ என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறினார்.
Book : 56


لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ القِرَبَ، وَقَالَ غَيْرُهُ: تَنْقُلاَنِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلَآَنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ القَوْمِ


Bukhari-2879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2879. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு எவருடைய பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஒரு புனிதப் போருக்குச் சென்றபோது (அவர்களின் மனைவிமார்களாகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய பெயர் வரவே, நான் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிடமிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற) ‘ஹிஜாப்’ சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந்தது.
Book :56


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ يَخْرُجُ سَهْمُهَا خَرَجَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا، فَخَرَجَ فِيهَا سَهْمِي، فَخَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ مَا أُنْزِلَ الحِجَابُ»


Bukhari-2877 & 2878

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 63 கடலில் (பயணம் செய்து) பெண் அறப்போரில் ஈடுபடுவது.

2877. & 2878. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்முஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தில் சிலர் இறைவழியில் (போரிடுவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்’ என்று கூறினார்கள்.

அதற்கு உம்மு ஹராம்(ரலி), ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம்(ரலி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம்(ரலி) நபி(ஸல்)

دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنَةِ مِلْحَانَ، فَاتَّكَأَ عِنْدَهَا، ثُمَّ ضَحِكَ فَقَالَتْ: لِمَ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ البَحْرَ الأَخْضَرَ فِي سَبِيلِ اللَّهِ، مَثَلُهُمْ مَثَلُ المُلُوكِ عَلَى الأَسِرَّةِ»، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «اللَّهُمَّ اجْعَلْهَا مِنْهُمْ»، ثُمَّ عَادَ فَضَحِكَ، فَقَالَتْ لَهُ مِثْلَ – أَوْ مِمَّ – ذَلِكَ، فَقَالَ لَهَا مِثْلَ ذَلِكَ، فَقَالَتْ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «أَنْتِ مِنَ الأَوَّلِينَ، وَلَسْتِ مِنَ الآخِرِينَ»، قَالَ: قَالَ أَنَسٌ: فَتَزَوَّجَتْ عُبَادَةَ بْنَ الصَّامِتِ فَرَكِبَتِ البَحْرَ مَعَ بِنْتِ قَرَظَةَ، فَلَمَّا قَفَلَتْ: رَكِبَتْ دَابَّتَهَا، فَوَقَصَتْ بِهَا، فَسَقَطَتْ عَنْهَا، فَمَاتَتْ


Bukhari-2876

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2876. இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார்.

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கவர்கள், ‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த ஜிஹாத் ஆகும்’ என்று கூறினார்கள்.
Book :56


«نِعْمَ الجِهَادُ الحَجُّ»


Bukhari-2875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

பெண்களின் அறப்போர்.

2875. இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா (ரலி) கூறினார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப்போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வது தான்’ என்று கூறினார்கள்.
Book : 56


اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الجِهَادِ، فَقَالَ: «جِهَادُكُنَّ الحَجُّ»


Bukhari-2874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2874. பராஉ(ரலி) அறிவித்தார்.

என்னிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின்வாங்கிச் சென்று விட்டீர்களே?’ என்று கேட்டார். நான், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஆனால், அவசர புத்தியுள்ள மக்கள் தான் பின்வாங்கிச் சென்றார்கள்.

எனவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.

அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உண்மையான இறைதூதரே. இதில் பொய் எதுவும் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
Book :56


قَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عُمَارَةَ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لاَ، وَاللَّهِ مَا وَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ، فَلَقِيَهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَأَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»


Bukhari-2873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 கழுதைகளின் மீது (சவாரி செய்து) போருக்குச் செல்வது.

பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை.

இதை அனஸ் (ரலி) அவர்கள் தம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு அய்லாவின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாகத் தந்தார் என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2873. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் மரணத்தின் போது) தம் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதத்தையும், தருமமாக விட்டுச் சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச் செல்லவில்லை.
Book : 56


«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً»


Bukhari-2872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2872. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார்.

அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்த. இதையறிந்த போது நபி(ஸல்) அவர்கள், ‘உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ஹம்மாத்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து மூஸா(ரஹ்) அவர்களும் நீண்டதாக அறிவித்தார்கள்.
Book :56


كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةٌ تُسَمَّى العَضْبَاءَ، لاَ تُسْبَقُ – قَالَ حُمَيْدٌ: أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ – فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ، فَقَالَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ»

طَوَّلَهُ مُوسَى، عَنْ حَمَّادٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page