Author: Farook

Bukhari-2871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம்.

நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை (தம் ஒட்டகமான) கஸ்வாவின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக் கொண்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.39

2871. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.
Book : 56


«كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا العَضْبَاءُ»


Bukhari-2870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்.

2870. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம்,

‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், ‘ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து’ என்று பதிலளித்தார்’ என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

தொடர்ந்து நாஃபிஉ(ரஹ்) கூறினார்.

‘நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை சனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

மேலும், இப்னு உமர்(ரலி) அவர்களும் (தம் குதிரையுடன்) பந்தயத்தில் பங்கெடுத்தார்கள்.

‘நான் மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?’ என்று கேட்க, ‘சுமார் ஒரு மைல்’ என்று அவர்கள்

سَابَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ، فَأَرْسَلَهَا مِنَ الحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الوَدَاعِ – فَقُلْتُ لِمُوسَى: فَكَمْ كَانَ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: سِتَّةُ أَمْيَالٍ أَوْ سَبْعَةٌ – وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، فَأَرْسَلَهَا مِنْ ثَنِيَّةِ الوَدَاعِ وَكَانَ أَمَدُهَا مَسْجِدَ بَنِي زُرَيْقٍ ” قُلْتُ: فَكَمْ بَيْنَ ذَلِكَ؟ قَالَ: مِيلٌ أَوْ نَحْوُهُ، وَكَانَ ابْنُ عُمَرَ مِمَّنْ سَابَقَ فِيهَا


Bukhari-2869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57 பந்தயத்திற்காகக் குதிரையை மெலிய வைப்பது.

2869. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.
Book : 56


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، وَكَانَ أَمَدُهَا مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ سَابَقَ بِهَا، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَمَدًا: غَايَةً “، {فَطَالَ عَلَيْهِمُ الأَمَدُ} [الحديد: 16]


Bukhari-2868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56 குதிரைப் பந்தயம்.

2868. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து ‘பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ(ரஹ்), ‘ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
Book : 56


«أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، قَالَ ابْنُ عُمَرَ: وَكُنْتُ فِيمَنْ أَجْرَى، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ سُفْيَانُ: بَيْنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةَ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ


Bukhari-2867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55 மந்தமாக நடக்கின்ற குதிரை.

2867. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மதீனாவாசிகள் ஒரு முறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் குணமுடைய ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தார்கள்.

திரும்பி வந்தபோது, ‘உங்களுடைய இந்த குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் நாம் கண்டோம்’ என்று கூறினார்கள். அதற்குப் பிறகு அந்த குதிரை வேறெந்த குதிரையும் அதை (வெல்ல முடியாத அளவிற்கு பந்தயத்தில்) முந்த முடியாததாக மாறிவிட்டது.
Book : 56


أَنَّ أَهْلَ المَدِينَةِ فَزِعُوا مَرَّةً، فَرَكِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ كَانَ يَقْطِفُ – أَوْ كَانَ فِيهِ قِطَافٌ – فَلَمَّا رَجَعَ قَالَ: «وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا، فَكَانَ بَعْدَ ذَلِكَ لاَ يُجَارَى»


Bukhari-2866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 சேணம் பூட்டப்படாத குதிரையில் சவாரி செய்தல்.

2866. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சேணம் பூட்டப்படாத, திறந்த மேனி கொண்ட ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தபடி, அவர்களின் கழுத்தில் வாளொன்று தொங்கிக் கொண்டிருக்க, மதீனா வாசிகளை நோக்கி வந்தார்கள்.
Book : 56


«اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَرَسٍ عُرْيٍ مَا عَلَيْهِ سَرْجٌ فِي عُنُقِهِ سَيْفٌ»


Bukhari-2865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 வாகனப் பிராணியின் அங்கவடி.35

2865. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் காலை அங்கவடியில் நுழைத்து, தம் ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல்ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து) தல்பியா கூறுவார்கள்.
Book : 56


«أَنَّهُ كَانَ إِذَا أَدْخَلَ رِجْلَهُ فِي الغَرْزِ، وَاسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً، أَهَلَّ مِنْ عِنْدِ مَسْجِدِ ذِي الحُلَيْفَةِ»


Bukhari-2864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 பிறருடைய வாகனத்தைப் போரில் ஓட்டிச் செல்வது.

2864. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.

ஒருவர் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மை தானா)?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை.

ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்களின் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை.

(நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி(ஸல்) அவர்களை தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூ சுப்யான்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்’ என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.
Book

قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَفِرَّ ، إِنَّ هَوَازِنَ كَانُوا قَوْمًا رُمَاةً، وَإِنَّا لَمَّا لَقِينَاهُمْ حَمَلْنَا عَلَيْهِمْ، فَانْهَزَمُوا فَأَقْبَلَ المُسْلِمُونَ عَلَى الغَنَائِمِ، وَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَفِرَّ، فَلَقَدْ رَأَيْتُهُ وَإِنَّهُ لَعَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»


Bukhari-2863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 அறப்போர் மற்றும் அதன் வழிமுறைகளின் சிறப்பு.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சொர்க்கத்திற்குப் பகரமாக வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்கள்; கொல்கிறார்கள்; கொல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்னும் இந்த வாக்குறுதி அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள சத்தியமான வாக்குறுதியாகும்.

இது தான் தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய(வேத நூல்கள் எல்லா) வற்றிலும் உள்ளது. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நன்கு நிறைவேற்றுபவர் வேறெவர் உள்ளார்? ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உங்கள் வியாபாரத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்.

இதுவே மாபெரும் வெற்றி. (இந்த ஒப்பந்தம் செய்து கொண்ட நம்பிக்கையாளர்கள்) அல்லாஹ்விடம் திரும்பி பாவமன்னிப்புக் கோரிய வண்ணமிருப்பவர்களும், (அவனை) வணங்கி வாழ்பவர்களும், (அவனது) புகழை எடுத்துரைப்பவர்களும், அவனுக்காக (அவனது மார்க்கத்தைப் பிரசாரம் செய்திட) சுற்றித் திரிபவர்களும் அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணக்கம் புரிபவர்களும், நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பவர்களும்

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِصَاحِبِهِ سَهْمًا»، وَقَالَ مَالِكٌ: ” يُسْهَمُ لِلْخَيْلِ وَالبَرَاذِينِ مِنْهَا، لِقَوْلِهِ: {وَالخَيْلَ وَالبِغَالَ وَالحَمِيرَ لِتَرْكَبُوهَا} [النحل: 8]، وَلاَ يُسْهَمُ لِأَكْثَرَ مِنْ فَرَسٍ


Bukhari-2862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 முரட்டு வாகனப் பிராணியின் மீதும், ஆண் குதிரையின் மீதும் சவாரி செய்யலாம்.

ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள், முன்னோர்கள், (சவாரி செய்வதற்கு) ஆண் குதிரையையே விரும்பினார்கள். ஏனெனில், அது தான் மிக வேகமாக ஓடக் கூடியதும், துணிச்சல் மிக்கதுமாகும் என்று கூறினார்கள்.

2862. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்டு வந்த குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சவாரி செய்தார்கள்.

பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையை(க் காண காரணம்) தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்’ என்று கூறினார்கள்.
Book : 56


كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَاسْتَعَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ، يُقَالُ لَهُ مَنْدُوبٌ، فَرَكِبَهُ وَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


Next Page » « Previous Page