Author: Farook

Bukhari-2861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 புனிதப் போரில் (கலந்து கொண்ட) அடுத்தவரின் வாகனப் பிராணியை அடி(த்து இயங்க வை)ப்பது.

2861. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரீ(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன்.. அறிவிப்பாளர் அபூ அகீல்(ரஹ்), ‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமாக என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்… (திரும்பி வரும் நேரத்தில்) நாங்கள் முன்னேறிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘தன் வீட்டாரிடம் சீக்கிரமாகச் செல்ல விரும்புபவர் சீக்கிரம் செல்லட்டும்’ என்று கூறினார்கள்.

நான் எனக்குச் சொந்தமான – குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து (சவாரி செய்து) கொண்டிருக்க, நாங்கள் முன்னேறிச் சென்றோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்பினால்) நின்றுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஜாபிரே! காத்திரு’ என்று கூறிவிட்டு, தம் சாட்டையால் அதை அடித்தார்கள்.

உடனே, ஒட்டகம் தன் இடத்திலிருந்து வேகமாக ஓடியது. நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டகத்தை நீ விற்பாயா?’ என்று கேட்க, நான், ‘ஆம் (விற்பேன்)’ என்று பதிலளித்தேன். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்கள்

أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، فَقُلْتُ لَهُ: حَدِّثْنِي بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَافَرْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ – قَالَ أَبُو عَقِيلٍ: لاَ أَدْرِي غَزْوَةً أَوْ عُمْرَةً – فَلَمَّا أَنْ أَقْبَلْنَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يَتَعَجَّلَ إِلَى أَهْلِهِ فَلْيُعَجِّلْ»، قَالَ جَابِرٌ: فَأَقْبَلْنَا وَأَنَا عَلَى جَمَلٍ لِي أَرْمَكَ لَيْسَ فِيهِ شِيَةٌ، وَالنَّاسُ خَلْفِي، فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ قَامَ عَلَيَّ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جَابِرُ اسْتَمْسِكْ»، فَضَرَبَهُ بِسَوْطِهِ ضَرْبَةً، فَوَثَبَ البَعِيرُ مَكَانَهُ، فَقَالَ: «أَتَبِيعُ الجَمَلَ؟»، قُلْتُ: نَعَمْ، فَلَمَّا قَدِمْنَا المَدِينَةَ وَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَسْجِدَ فِي طَوَائِفِ أَصْحَابِهِ، فَدَخَلْتُ إِلَيْهِ وَعَقَلْتُ الجَمَلَ فِي نَاحِيَةِ البَلاَطِ، فَقُلْتُ لَهُ: هَذَا جَمَلُكَ، فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ وَيَقُولُ: «الجَمَلُ جَمَلُنَا»، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَاقٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَعْطُوهَا جَابِرًا» ثُمَّ قَالَ: «اسْتَوْفَيْتَ الثَّمَنَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «الثَّمَنُ وَالجَمَلُ لَكَ»


Bukhari-2860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 மூன்று பேருக்குரிய (மூன்று வகைப் பலன்களைத் தரும்) குதிரைகள்.

அல்லாஹ் கூறுகிறான்: மேலும் குதிரைகளையும்,கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் அவற்றின் மீது பயணம் செய்வதற்காகவும் (உங்கள் வாழ்வின்) அலங்காரமாக இருக்கும் என்பதற்காகவும் அவன் படைத்தான். (16:8)

2860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நற்பலன் கிடைக்கும். அதன் கயிறு துண்டிக்கப்பட்டு, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவிற்கும் அதனுடைய விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு

الخَيْلُ لِثَلاَثَةٍ: لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ المَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ أَرْوَاثُهَا وَآثَارُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ، فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً، وَنِوَاءً لِأَهْلِ الإِسْلاَمِ فَهِيَ وِزْرٌ عَلَى ذَلِكَ ”
وَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الحُمُرِ، فَقَالَ: «مَا أُنْزِلَ عَلَيَّ فِيهَا إِلَّا هَذِهِ الآيَةُ الجَامِعَةُ الفَاذَّةُ»: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8]


Bukhari-2859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி)

அத்தியாயம்: 56


«إِنْ كَانَ فِي شَيْءٍ، فَفِي المَرْأَةِ، وَالفَرَسِ، وَالمَسْكَنِ»


Bukhari-2858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 47

குதிரையில் அபசகுனம் உண்டு – என்னும் கூற்று.

2858. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே (இருக்க முடியும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

அத்தியாயம்: 56


إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ: فِي الفَرَسِ، وَالمَرْأَةِ، وَالدَّارِ


Bukhari-2857

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2857. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்ட எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சவாரி செய்த பிறகு) ‘பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. மேலும், இந்த குதிரையை தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்’ என்று கூறினார்கள்.
Book :56


كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ، فَاسْتَعَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لَنَا يُقَالُ لَهُ مَنْدُوبٌ، فَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


Bukhari-2856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2856. முஆத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் ‘உஃபைர்’ என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள்.

நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று பதில் கூறினேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்’ என்று பதில் கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :56


كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ: «يَا مُعَاذُ، هَلْ تَدْرِي حَقَّ اللَّهِ عَلَى عِبَادِهِ، وَمَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ؟»، قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُبَشِّرُ بِهِ النَّاسَ؟ قَالَ: «لاَ تُبَشِّرْهُمْ، فَيَتَّكِلُوا»


Bukhari-2855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2855. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

எங்கள் தோட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) ‘லுஹைஃப்’ என்றழைக்கப்பட்ட குதிரையொன்று இருந்தது.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்; அவர்களில் சிலர் அதன் பெயர் ‘லுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள்.
Book :56


«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطِنَا فَرَسٌ يُقَالُ لَهُ اللُّحَيْفُ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” وَقَالَ بَعْضُهُمُ: اللُّخَيْفُ


Bukhari-2854

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் பிரத்யேகப் பெயர் சூட்டுவது.

2854. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என்னுடைய தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கி விட்டேன். அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்; நான் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்த பொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்றுவிட்டுவிட்டார்கள்.

(நான் அதைப் பார்த்தவுடன்) ‘ஜராதா’ என்றழைக்கப்பட்ட என்னுடைய குதிரையின் மீது ஏறிக் கொண்டு என் தோழர்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். எனவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு (அதை அறுத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற்காக) வருந்தினார்கள்.

அவர்கள் நபி(ஸல்) அவர்களை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அதிலிருந்து ஏதேனும் (ஒரு பகுதி இறைச்சி) உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். ‘அதனுடைய கால் எங்களிடம் இருக்கிறது’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَخَلَّفَ أَبُو قَتَادَةَ مَعَ بَعْضِ أَصْحَابِهِ، وَهُمْ مُحْرِمُونَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَوْا حِمَارًا وَحْشِيًّا قَبْلَ أَنْ يَرَاهُ، فَلَمَّا رَأَوْهُ تَرَكُوهُ حَتَّى رَآهُ أَبُو قَتَادَةَ، فَرَكِبَ فَرَسًا لَهُ يُقَالُ لَهُ  الجَرَادَةُ، فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَتَنَاوَلَهُ، فَحَمَلَ فَعَقَرَهُ، ثُمَّ أَكَلَ، فَأَكَلُوا فَنَدِمُوا، فَلَمَّا أَدْرَكُوهُ قَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟»، قَالَ: مَعَنَا رِجْلُهُ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَهَا


Bukhari-2853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராக வைத்திருப்பதின் சிறப்பு.

ஏனெனில் அல்லாஹ், மேலும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பலத்தையும் (போருக்குத்) தயாராக உள்ள குதிரைகளையும் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள் (8:60) என்று கூறுகிறான்.

2853. ‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவர், அதற்குப் போடுகிற தீனி, புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம், சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56


«مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-2852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 44

நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமைநாள் வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

2852. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் (அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுவதால் கிடைக்கும்) நற்கூலியும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும்.

அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)

அத்தியாயம்: 56


الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ: الأَجْرُ وَالمَغْنَمُ


Next Page » « Previous Page