Author: Farook

Bukhari-2790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களின் படித்தரங்கள்

2790. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி’ என்று கூறினார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்:

மேலும், ‘அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு – சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே

«مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: «إِنَّ فِي الجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ، أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ، فَاسْأَلُوهُ الفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الجَنَّةِ وَأَعْلَى الجَنَّةِ – أُرَاهُ – فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الجَنَّةِ» قَالَ مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ أَبِيهِ: وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ


Bukhari-2788

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 3

அறப்போர் புரியவும், அதில் உயிர்த் தியாகம் செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்வாய்ப்பு வேண்டிப் பிரார்த்தித்தல்.

உமர் (ரலி) அவர்கள், இறைவா! உன் தூதருடைய ஊரில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

2788. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ – وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ – فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ،


Bukhari-2787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் – (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும்.

அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«مَثَلُ المُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ، كَمَثَلِ الصَّائِمِ القَائِمِ، وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ، بِأَنْ يَتَوَفَّاهُ أَنْ [ص:16] يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ سَالِمًا مَعَ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»


Bukhari-2786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 அல்லாஹ்வின் பாதையில் உயிரையும், உடைமையையும் அர்ப்பணித்துப் பேராடும் இறை நம்பிக்கையாளரே மனிதர்களில் சிறந்தவராவார்.

அல்லாஹ் கூறுகின்றான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து காப்பாற்றக் கூடிய ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது தான்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும் அல்லாஹ்வின் பாதையில் உங்கள் உடைமை களாலும் உயிர்களாலும் போராடுவதும் ஆகும். (இதனால் கிடைக்கும் பெரும் நன்மையை) நீங்கள் அறிவீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

உங்கள் பாவங்களை மன்னித்து , கீழே நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்க(த் தோட்ட)ங்களில் உங்களை அவன் புகுத்துவான்; நிலையான சொர்க்கங்களில் சிறந்த வீடுகளையும் உங்களுக்குத் தருவான். அதுவே மகத்தான வெற்றியாகும். (61:10-12)

2786. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில்

قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ»، قَالُوا: ثُمَّ مَنْ؟ قَالَ: «مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ»


Bukhari-2785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2785. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படி எதையும் நான் காணவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத்தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘அது யாரால் முடியும்?’ என்று பதிலளித்தார்.
‘அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்’ என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Book :56


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: دُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الجِهَادَ؟ قَالَ: «لاَ أَجِدُهُ» قَالَ: «هَلْ تَسْتَطِيعُ إِذَا خَرَجَ المُجَاهِدُ أَنْ تَدْخُلَ مَسْجِدَكَ فَتَقُومَ وَلاَ تَفْتُرَ، وَتَصُومَ وَلاَ تُفْطِرَ؟»، قَالَ: وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ؟، قَالَ أَبُو هُرَيْرَةَ: «إِنَّ فَرَسَ المُجَاهِدِ لَيَسْتَنُّ فِي طِوَلِهِ، فَيُكْتَبُ لَهُ حَسَنَاتٍ»


Bukhari-2784

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2784. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்’ என்று பதிலளித்தார்கள்.
Book :56


يَا رَسُولَ اللَّهِ تُرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ


Bukhari-2783

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2783. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத்(இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது.

ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :56


«لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»


Bukhari-2782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாடம் : 176 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும்.

2782. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது’ என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)’ என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘பிறகு எது (சிறந்தது?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்’ என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.
Book : 56


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ العَمَلِ  أَفْضَلُ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى مِيقَاتِهَا»، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ»، قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي


Bukhari-2781

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 36

இறந்தவரின் கடன்களை, வாரிசுகள் வருகை தராமலேயே அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அடைக்கலாம்.

2781. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம் மீது நிறையக் கடன்விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனுடைய இடத்தில் குவித்து வை’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்தார்கள்.

பிறகு, உன் கடன்காரர்களைக் கூப்பிடு’ என்றார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு

أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ سِتَّ بَنَاتٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، فَلَمَّا حَضَرَ جِدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الغُرَمَاءُ، قَالَ: «اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَتِهِ»، فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «ادْعُ أَصْحَابَكَ»، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَأَنَا وَاللَّهِ رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلِمَ وَاللَّهِ البَيَادِرُ كُلُّهَا حَتَّى أَنِّي أَنْظُرُ إِلَى البَيْدَرِ الَّذِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ لَمْ يَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” أُغْرُوا بِي: يَعْنِي هِيجُوا بِي، {فَأَغْرَيْنَا بَيْنَهُمُ العَدَاوَةَ وَالبَغْضَاءَ} [المائدة: 14]


Bukhari-2780

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்யும் நேரத்தில் அதைப் பற்றி இருவர் சாட்சியம் அளிக்க வேண்டும்; (அதற்கான விதிமுறைகளாவன:) உங்களிடையே நேர்மையான இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணத்தில் இருக்கும் பொழுது மரணத் துன்பம் (முஸ்லிம் களாகிய) உங்களை அணுகி விட்டால் உங்களைத் தவிர வேறு இருவரை சாட்சிகளாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (சாட்சிகள் குறித்து) நீங்கள் சந்தேகப் பட்டால் தொழுகைக்குப் பிறகு (பள்ளிவாசலில்) அவர்களை நீங்கள் நிறுத்தி வைக்க,அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு,

நாங்கள் எங்கள் சாட்சியத்தை விலைக்கு விற்க மாட் டோம்; அதனால் எங்கள் உறவினர்கள் பலனடைவதாயிருப்பினும் சரியே! மேலும், அல்லாஹ்வுக்கு அளிக்க வேண்டிய சாட்சியத்தை மறைக்க மாட்டோம். அப்படி மறைத்தால் நாங்கள் பாவிகளாவோம் என்று கூறட்டும். ஆனால், (இதற்குப் பிறகும்) அவர்கள் பொய் சாட்சியம் கூறி பாவத்திற்காளாகி விட்டார்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டால், தமது உரிமை பாதிக்கப்பட்ட (இறந்த)வர்(களின் உறவினர்)களிலிருந்து தகுதி வாய்ந்த இருவர் எழுந்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, எங்கள் சாட்சியமே அவர்கள் இருவரின் சாட்சியத்தை

خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ، وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ، فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ، فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، «فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلّى الله عليه  وسلم»، ثُمَّ وُجِدَ الجَامُ بِمَكَّةَ، فَقَالُوا: ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ، فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الجَامَ لِصَاحِبِهِمْ، قَالَ: وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ المَوْتُ} [المائدة: 106]


Next Page » « Previous Page