Author: Farook

Bukhari-2779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 வக்ஃபு செய்பவர், இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கேட்கின்றோம் என்று கூறினால் அது செல்லும்.

2779. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்கள்.
Book : 55


«يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ»، قَالُوا: لاَ نَطْلُبُ ثَمَنَهُ، إِلَّا إِلَى اللَّهِ


Bukhari-2778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற்றையோ வக்ஃபு செய்தால், அல்லது மற்ற முஸ்லிம்கள் அந்தத் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவது போல் தனக்கும் அதைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டால் (அவை செல்லும்.)

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை வக்ஃபு செய்தார்கள். (மதீனாவுக்கு) வரும் போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் தம் வீடுகளை தர்மம் செய்தார்கள். தமது பெண்மக்களில் விவாகரத்து செய்யப்பட்ட ஒருவருக்கு, நீ இதில் தீங்கிழைக்காமலும் தீங்குக்கு ஆளாகாமலும் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி அனுமதியளித்தார்கள். ஆனால், மறுமணம் செய்து கொண்டு, தன்னிறைவு பெற்று விட்டால் நீ அதில் தங்க அனுமதியில்லை என்று நிபந்தனையும் விதித்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் தந்தை உமர் (ரலி) அவர்களின் வீட்டிலிருந்து தமக்குக் கிடைத்த பங்கில் தமது குடும்பத்தாரில் தேவையுள்ளவர்கள் வசித்துக் கொள்ள வகை செய்தார்கள்.

2778. அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார்.

(கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன்.

أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ وَقَدْ يَلِيهِ الوَاقِفُ وَغَيْرُهُ فَهُوَ وَاسِعٌ لِكُلٍّ»


Bukhari-2777

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2777. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமுறைகள் நிர்ணயித்தார்கள்.
Book :55


«أَنَّ عُمَرَ اشْتَرَطَ فِي وَقْفِهِ، أَنْ يَأْكُلَ مَنْ وَلِيَهُ، وَيُؤْكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ مَالًا»


Bukhari-2776

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 32

வக்ஃபுச் சொத்தை நிர்வகிப்பவருக்குரிய ஊதியம்.

2776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும், என் ஊழியரின் கூலியையும் தவிர, நான்விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا وَلاَ دِرْهَمًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي، وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ»


Bukhari-2775

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 பிராணிகள், கால்நடைகள், சாமான்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்வது (செல்லும்)

ஒருவர் ஆயிரம் தீனார்களை (தங்க நாணயங்களை) அல்லாஹ்வின் பாதையில் வக்ஃபு செய்து, அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவனிடம் தந்து (அதை முதலீடு செய்து) வியாபாரம் செய்யும்படி கூறி, அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் தருமம் செய்கிறார்.

இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்திலிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா? அவர் (தருமத்துக்குரியவர்களைக் குறிப்பிடும் போது) ஏழைஎளியவர்களுக்கு தருமம் செய்யும் படி குறிப்பிடவில்லையென்றாலும் கூட அதிலிருந்து உண்ண அவருக்கு அனுமதி யுண்டா? என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், அதிலிருந்து உண்பதற்கு அவருக்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

2775. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி இறைவழியில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே

أَنَّ عُمَرَ حَمَلَ عَلَى فَرَسٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ أَعْطَاهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَحْمِلَ عَلَيْهَا رَجُلًا، فَأُخْبِرَ عُمَرُ أَنَّهُ قَدْ وَقَفَهَا يَبِيعُهَا، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْتَاعَهَا، فَقَالَ: «لاَ تَبْتَعْهَا، وَلاَ تَرْجِعَنَّ فِي صَدَقَتِكَ»


Bukhari-2774

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 பள்ளிவாசலுக்காக நிலத்தை வக்ஃபு செய்வது (செல்லும்)

2774. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டு விட்டு, ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், ‘நாங்கள் விலைகூற மாட்டோம். அல்லாஹ்வின் மீதானையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்கள்.
Book : 55


لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ أَمَرَ بِبِنَاءِ المَسْجِدِ، وَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا» قَالُوا: لاَ وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ


Bukhari-2773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 செல்வந்தனுக்கும், ஏழைக்கும், விருந்தினருக்கும் வக்ஃபு செய்வது.

2773. உமர்(ரலி) கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தருமம் செய்துவிடுங்கள்’ என்று ஆலோசனை கூறினார்கள்.

எனவே, அதை ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் (அதன் வருவாயைச்) செலவிடும்படி தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள்.
Book : 55


أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجَدَ مَالًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ قَالَ: «إِنْ شِئْتَ تَصَدَّقْتَ بِهَا»، فَتَصَدَّقَ بِهَا فِي الفُقَرَاءِ وَالمَسَاكِينِ وَذِي القُرْبَى وَالضَّيْفِ


Bukhari-2772

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


أَصَابَ عُمَرُ بِخَيْبَرَ أَرْضًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ مِنْهُ، فَكَيْفَ تَأْمُرُنِي بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا»، فَتَصَدَّقَ عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ فِي الفُقَرَاءِ، وَالقُرْبَى وَالرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ، لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ


Bukhari-2771

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 பலருக்கும் பொதுவான ஒரு நிலத்தை அவர்கள் வக்ஃப் செய்தால் செல்லும்.

2771. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்திரவிட்டபோது, ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்கள்.
Book : 55


أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ المَسْجِدِ، فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا»، قَالُوا: لاَ وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ


Bukhari-2770

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, ‘அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பலனளிக்கும்)’ என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், ‘என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு, தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்’ என்று கூறினார்.
Book :55


أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنَّ لِي مِخْرَافًا وَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا


Next Page » « Previous Page