Author: Farook

Bukhari-2769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃபு செய்யும் போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறா விட்டாலும் அவரது வக்ஃபு செல்லும். தருமமும் அவ்வாறே (செல்லும்).

2769. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி) மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த ‘பைருஹா’ தோட்டம் தான் அவரின் சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்னும் (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டபோது

அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ் தங்களுக்குக்

كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، مُسْتَقْبِلَةَ المَسْجِدِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92]، قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا حَيْثُ أَرَاكَ اللَّهُ، فَقَالَ: «بَخْ، ذَلِكَ مَالٌ رَابِحٌ أَوْ رَايِحٌ – شَكَّ ابْنُ مَسْلَمَةَ – وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ»، قَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ، وَفِي بَنِي عَمِّهِ، وَقَالَ إِسْمَاعِيلُ، وَعَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، وَيَحْيَى بْنُ يَحْيَى: عَنْ مَالِكٍ: «رَايِحٌ»


Bukhari-2768

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 பயணத்திலிருக்கும் போதும் ஊரிலிருக்கும் போதும் அநாதையைப் பணியாளாக வைத்துக் கொள்வதால் அந்த அநாதைக்குப் பயனும் நன்மையும் உண்டு என்றால் அது அனுமதிக்கப்பட்டதாகும். மேலும், அநாதையின் தாய் அல்லது அவளது கணவன் (இருவரும் அவனது காப்பாளர்களாக நியமிக்கப்படா விட்டாலும்) அவனை கவனித்துக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே.

2768. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்’ என்று கூறினார்கள்.

எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பயணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எச்செய்கைக்காகவும், ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
Book : 55


قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ لَيْسَ لَهُ خَادِمٌ، فَأَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ فَلْيَخْدُمْكَ، قَالَ: «فَخَدَمْتُهُ فِي السَّفَرِ وَالحَضَرِ، مَا قَالَ لِي لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا؟ وَلاَ لِشَيْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا؟»


Bukhari-2767

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அநாதைகளைப் பற்றி உங்களிடம் கேட்கின்றார்கள். கூறுங்கள்: அவர்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (அதில் குற்றமேதுமில்லை. ஏனெனில்,) அவர்கள் உங்கள் சகோதரர்களே! தீமை செய்பவரையும் நன்மை செய்பவரையும் அல்லாஹ் (பிரித்து) அறிகின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ் விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். அவன் பேராற்றல் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆவான். (2:220)

2767. ‘இப்னு உமர்(ரலி) எவராவது தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து மரண சாசனம் செய்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை’ என்று நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

ஓர் அநாதையின் செல்வத்தின் விஷயத்தில் இப்னு சீரின்(ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும்.

தாவூஸ்(ரஹ்) அவர்களிடம் அநாதைகளைக் குறித்து எதுவும் கேட்கப்பட்டால், ‘அல்லாஹ் நன்மை செய்பவரையும் தீமை செய்பவரையும் (பிரித்து) அறிகிறான்’ என்னும் (திருக்குர்ஆன் 02:220) இறைவசனத்தை ஓதுவார்கள். சிறுவயதுடைய அநாதைகள் குறித்தும் அதாஉ(ரஹ்), ‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப

مَا رَدَّ ابْنُ عُمَرَ عَلَى أَحَدٍ وَصِيَّةً وَكَانَ ابْنُ سِيرِينَ أَحَبَّ الأَشْيَاءِ إِلَيْهِ فِي مَالِ اليَتِيمِ أَنْ يَجْتَمِعَ إِلَيْهِ نُصَحَاؤُهُ وَأَوْلِيَاؤُهُ، فَيَنْظُرُوا الَّذِي هُوَ خَيْرٌ لَهُ وَكَانَ طَاوُسٌ: ” إِذَا سُئِلَ عَنْ شَيْءٍ مِنْ أَمْرِ اليَتَامَى قَرَأَ: {وَاللَّهُ يَعْلَمُ المُفْسِدَ مِنَ المُصْلِحِ} [البقرة: 220] وَقَالَ عَطَاءٌ فِي يَتَامَى الصَّغِيرِ وَالكَبِيرِ: «يُنْفِقُ الوَلِيُّ عَلَى كُلِّ إِنْسَانٍ بِقَدْرِهِ مِنْ حِصَّتِهِ»


Bukhari-2766

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

அல்லாஹ் கூறுகிறான்:

அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள். (அல்குர்ஆன்: 4:10)

2766. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,

1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . சூனியம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டி உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55


«اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ»


Bukhari-2765

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘வசதியுள்ளவர் (அதிலிருந்து எடுத்து உண்ணாமல் தம்மைத்) தற்காத்துக் கொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமான அளவு உண்ணட்டும்’ என்னும் (திருக்குர்ஆன் 04:06) இறைவசனம் அனாதையின் பராமரிப்பாளரின் விஷயத்தில், அவர் தேவையுள்ளவராக இருந்தால் அனாதையின் செல்வத்திலிருந்து, அந்த (அனாதையுடைய) செல்வத்தின் அளவிற்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக் கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.
Book :55


{وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ، وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} [النساء: 6]، قَالَتْ: «أُنْزِلَتْ فِي وَالِي اليَتِيمِ أَنْ يُصِيبَ مِنْ مَالِهِ إِذَا كَانَ مُحْتَاجًا بِقَدْرِ مَالِهِ بِالْمَعْرُوفِ»


Bukhari-2764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை (விபரம் புரியத் தொடங்கி விட்டதா என்று) சோதித்து வாருங்கள். அவர்களிடம் (விபரம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மனப்) பக்குவத்தை நீங்கள் கண்டால் அவர்களுடைய செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் உரிமையைக் கேட்பார்கள் என்று அஞ்சி, அந்தச் செல்வங்களை நியாயத்திற்குக் புறம்பாக விரயம் செய்தும் அவசரமாகவும் விழுங்கி விடாதீர்கள்.

அநாதைகளின் காப்பாளர் வசதியுள்ளவராக இருந்தால் அவர்களின் செல்வத்திலிருந்து உண்பதை அவர் தவிர்த்துக் கொள்ளட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமான அளவிற்கு (அதிலிருந்து) உண்ணட்டும். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கணக்குக் கேட்க அல்லாஹ்வே போதுமானவன்.

(இறந்து விட்ட) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கிருக்கின்றது. (அது போன்றே) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கிருக்கின்றது; அந்தச் சொத்து குறைவானதாயினும் சரி, அதிகமானதாயினும் சரி! இது அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.

أَنَّ عُمَرَ تَصَدَّقَ بِمَالٍ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُقَالُ لَهُ ثَمْغٌ وَكَانَ نَخْلًا، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي اسْتَفَدْتُ مَالًا وَهُوَ عِنْدِي نَفِيسٌ، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ»، فَتَصَدَّقَ بِهِ عُمَرُ، فَصَدَقَتُهُ تِلْكَ فِي سَبِيلِ اللَّهِ وَفِي الرِّقَابِ وَالمَسَاكِينِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ وَلِذِي القُرْبَى، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ، أَوْ يُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ بِهِ


Bukhari-2763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்:

அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (சொத்துகளை) கொடுத்து விடுங்கள். நல்ல பொருளைக் கொடுத்து விட்டுத் தீய பொருளை (அதற்கு) மாற்றாக வாங்கிக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களின் பொருட்களை உங்கள் பொருட்களோடு சேர்த்து உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும்பாவமாகும். அநாதை(ப் பெண்)களிடம் நீதியுடன் நடந்து கொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால், உங்கள் மனத்திற்குப் பிடித்த பெண்களை……….. மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:2,3)

2763. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் மேற்கண்ட 4:2,3 வசனத்தைக் குறித்து கேட்டபோது, பின்வருமாறு பதிலளித்தார்கள்.

இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவரின் அழகுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு, அவளை அவளுக்கு ஈடான பெண்களின் மஹ்ருத் தொகையை விடக் குறைவாகக் கொடுத்து மணந்துகொள்ள விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மஹ்ரை முழுமையாகக் கொடுத்து நீதியுடன் நடந்தாலே தவிர அவர்களை மணம் புரிந்து கொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டு, அவர்களைத் தவிரவுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டார்கள்.

பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் இந்த

{وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3]، قَالَتْ: هِيَ اليَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلَّا أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ، قَالَتْ عَائِشَةُ: ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} [النساء: 127]، قَالَتْ: ” فَبَيَّنَ اللَّهُ فِي هَذِهِ الآيَةِ: أَنَّ اليَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ، وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا، وَلَمْ يُلْحِقُوهَا بِسُنَّتِهَا بِإِكْمَالِ الصَّدَاقِ، فَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ المَالِ وَالجَمَالِ تَرَكُوهَا وَالتَمَسُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ “، قَالَ: فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا، فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا، إِلَّا أَنْ يُقْسِطُوا لَهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ وَيُعْطُوهَا حَقَّهَا


Bukhari-2762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 20

வக்ஃபு செய்வதற்கும் தருமம் செய்வதற்கும் சாட்சி வைப்பது.

2762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ ஸாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஊரில் இல்லாதபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவருக்காகத் தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 55


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، فَهَلْ يَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا


Bukhari-2761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2761. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று’ என்று கூறினார்கள்.
Book :55


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»


Bukhari-2760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 திடீரென இறந்து போனவர் சார்பாக தர்மம் செய்வதும், இறந்தவர் சார்பாக (அவர் அல்லாஹ்வின் பெயரால் செய்து, நிறைவேற்றத் தவறிய) நேர்ச்சைகளை நிறைவேற்றுவதும் விரும்பத் தக்கதாகும்.

2760. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம், அவர் சார்பாக தர்மம் செய்’ என்று கூறினார்கள்.
Book : 55


أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا وَأُرَاهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ تَصَدَّقْ عَنْهَا»


Next Page » « Previous Page