தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2767

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அநாதைகளைப் பற்றி உங்களிடம் கேட்கின்றார்கள். கூறுங்கள்: அவர்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (அதில் குற்றமேதுமில்லை. ஏனெனில்,) அவர்கள் உங்கள் சகோதரர்களே! தீமை செய்பவரையும் நன்மை செய்பவரையும் அல்லாஹ் (பிரித்து) அறிகின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ் விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். அவன் பேராற்றல் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆவான். (2:220)

 ‘இப்னு உமர்(ரலி) எவராவது தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து மரண சாசனம் செய்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை’ என்று நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

ஓர் அநாதையின் செல்வத்தின் விஷயத்தில் இப்னு சீரின்(ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும்.

தாவூஸ்(ரஹ்) அவர்களிடம் அநாதைகளைக் குறித்து எதுவும் கேட்கப்பட்டால், ‘அல்லாஹ் நன்மை செய்பவரையும் தீமை செய்பவரையும் (பிரித்து) அறிகிறான்’ என்னும் (திருக்குர்ஆன் 02:220) இறைவசனத்தை ஓதுவார்கள். சிறுவயதுடைய அநாதைகள் குறித்தும் அதாஉ(ரஹ்), ‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்’ என்று கூறினார்கள்.
Book : 55

(புகாரி: 2767)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ اليَتَامَى، قُلْ إِصْلاَحٌ لَهُمْ خَيْرٌ، وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ المُفْسِدَ مِنَ المُصْلِحِ، وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ} [البقرة: 220] ” لَأَعْنَتَكُمْ: لَأَحْرَجَكُمْ وَضَيَّقَ، وَعَنَتِ: خَضَعَتْ

وَقَالَ لَنَا سُلَيْمَانُ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ

مَا رَدَّ ابْنُ عُمَرَ عَلَى أَحَدٍ وَصِيَّةً وَكَانَ ابْنُ سِيرِينَ أَحَبَّ الأَشْيَاءِ إِلَيْهِ فِي مَالِ اليَتِيمِ أَنْ يَجْتَمِعَ إِلَيْهِ نُصَحَاؤُهُ وَأَوْلِيَاؤُهُ، فَيَنْظُرُوا الَّذِي هُوَ خَيْرٌ لَهُ وَكَانَ طَاوُسٌ: ” إِذَا سُئِلَ عَنْ شَيْءٍ مِنْ أَمْرِ اليَتَامَى قَرَأَ: {وَاللَّهُ يَعْلَمُ المُفْسِدَ مِنَ المُصْلِحِ} [البقرة: 220] وَقَالَ عَطَاءٌ فِي يَتَامَى الصَّغِيرِ وَالكَبِيرِ: «يُنْفِقُ الوَلِيُّ عَلَى كُلِّ إِنْسَانٍ بِقَدْرِهِ مِنْ حِصَّتِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.