Author: Farook

Bukhari-2759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 அல்லாஹ் கூறுகிறான்: (உங்கள்) சொத்துகளைப் பங்கிடும் போது (தூரத்து) உறவினர்களும், அனாதைகளும், ஏழை எளியவர்களும் வருவார்களாயின் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதேனும்) கொடுங்கள். (4:8)

2759. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மக்கள் சிலர், ‘இந்த (திருக்குர்ஆன் 04:08) இறைவசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டுவிட்டது’ என்று கருதுகிறார்கள். இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. ஆனால், மக்கள் இதை இலேசாகக் கருதி (செயல்படுத்தாமல் விட்டு)விட்டார்கள். காப்பாளர்கள் இரண்டு வகைப்படுவர். ஒரு வகையினர் (இறப்பவரின்) காப்பாளராவார். இவர் வாரிசாவார். இந்த (இரத்த பந்தமுள்ள) காப்பாளர் தான் (தூரத்து உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்) கொடுப்பார்.

மற்றொரு காப்பாளர், இவர் வாரிசாக மாட்டார். (உதாரணமாக, அனாதைகளின் காப்பாளர்.) இவர்தான், (சொத்தைப் பங்கிடும்போது தமக்கும் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதைகளுக்கும்) நல்ல முறையில் (இன்சொல் பேசி அன்புடன்), ‘நான் உனக்கு எதுவும் தர இயலவில்லை’ என்று கூறி விடுவார்.
Book : 55


إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ هَذِهِ الآيَةَ نُسِخَتْ، وَلاَ وَاللَّهِ مَا نُسِخَتْ، وَلَكِنَّهَا مِمَّا تَهَاوَنَ النَّاسُ، هُمَا وَالِيَانِ، وَالٍ يَرِثُ وَذَاكَ الَّذِي يَرْزُقُ، وَوَالٍ لاَ يَرِثُ، فَذَاكَ الَّذِي يَقُولُ بِالْمَعْرُوفِ، يَقُولُ: لاَ أَمْلِكُ لَكَ أَنْ أُعْطِيَكَ


Bukhari-2758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 ஒருவர் தன் முகவரிடம் தருமப் பொருளை (தருமம் செய்து விடும்படி) கொடுக்க, முகவர் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவது.
2758. அனஸ்(ரலி) கூறினார்.

‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது’ (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்று கூறுகிறான்.

என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது ‘பைருஹா’ (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணீரை அருந்துவது வழக்கம் – எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மிகவும் நல்லது,

لَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] جَاءَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي كِتَابِهِ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، قَالَ: – وَكَانَتْ حَدِيقَةً كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا، وَيَسْتَظِلُّ بِهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا -، فَهِيَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْجُو بِرَّهُ وَذُخْرَهُ، فَضَعْهَا أَيْ رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَخْ يَا أَبَا طَلْحَةَ ذَلِكَ مَالٌ رَابِحٌ، قَبِلْنَاهُ مِنْكَ، وَرَدَدْنَاهُ عَلَيْكَ، فَاجْعَلْهُ فِي الأَقْرَبِينَ»، فَتَصَدَّقَ بِهِ أَبُو طَلْحَةَ عَلَى ذَوِي رَحِمِهِ، قَالَ: وَكَانَ مِنْهُمْ أُبَيٌّ، وَحَسَّانُ، قَالَ: وَبَاعَ حَسَّانُ حِصَّتَهُ مِنْهُ مِنْ مُعَاوِيَةَ، فَقِيلَ لَهُ: تَبِيعُ صَدَقَةَ أَبِي طَلْحَةَ، فَقَالَ: أَلاَ أَبِيعُ صَاعًا مِنْ تَمْرٍ بِصَاعٍ مِنْ دَرَاهِمَ، قَالَ: وَكَانَتْ تِلْكَ الحَدِيقَةُ فِي مَوْضِعِ قَصْرِ بَنِي حُدَيْلَةَ الَّذِي بَنَاهُ مُعَاوِيَةُ


Bukhari-2757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 16

ஒருவர் தன் செல்வத்தில் ஒரு பகுதியையோ, அல்லது தன் அடிமைகள் சிலரையோ, கால்நடைகள் சிலவற்றையோ தருமம் செய்தால் அல்லது வக்ஃபு செய்தால் அது செல்லும்.

2757. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக் கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாகக் கொடுத்து வடுவதை என் தவ்பாவில் (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டதற்காக மன்னிப்புக் கோரிப் பிராயச் சித்தம் தேடும் முயற்சிகளில்) ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது’ என்று கூறினார்கள். நான், ‘கைபரில் உள்ள என்னுடைய பங்கை (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினேன்.

அத்தியாயம்: 55


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ، وَإِلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ، فَهُوَ خَيْرٌ لَكَ»، قُلْتُ: فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ


Bukhari-2756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஒருவர் ஒரு பொருளை வக்ஃபு செய்தால் அதை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் முன்பே கூட அது செல்லும். ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வக்ஃபு செய்த போது, அதற்கு (நிர்வாகப்) பொறுப்பேற்பவர் அதிலிருந்து சிறிது உண்பதால் அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். அதற்கு நான் பொறுப்பேற்றால் என்றோ பிறர் பொறுப்பேற்றால் என்றோ அப்போது குறிப்பிட்டுக் கூறவில்லை.

நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், நீ அதை (உன் தோட்டத்தை) உன் நெருங்கிய உறவினர்களிடையே பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன் என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டு, அதைத் தமது உறவினர் களிடையேயும் தம் தந்தையின் உடன் பிறந்தாருடைய மக்களிடையேயும் பங்கிட்டு விட்டார்கள்.

பாடம் : 14 ஒருவர் என் வீடு அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா? அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா? என்று விளக்காமல் விட்டுவிட்டாலும் அது செல்லும். அதை அவர் தம் உறவினர்களுக்கோ அல்லது அவர் விரும்பியவர்களுக்கோ தரலாம்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள், என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா(என்னும் தோட்டம்) தான்; அதை நான்

أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا


Bukhari-2755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2755. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டார்கள். உடனே அவரிடம், ‘அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி (கொடுக்கப்பட்டவுள்ள) ஒட்டகம்’ என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும் போது), ‘அழிந்து போவாய்! அதில் ஏறிக் கொள்’ என்று கூறினார்கள்.
Book :55


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا وَيْلَكَ» فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ


Bukhari-2754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 வக்ஃபு செய்தவர் தமது வக்ஃபுச் சொத்தினால் (அறக் கொடையினால்) பயனடையலாமா?

உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக்குக் கிடைத்த நிலத்தை வக்ஃபு செய்த போது), அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை என்ற நிபந்தனையைச் சேர்த்தார்கள். மேலும், வக்ஃபு செய்தவரே கூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். இவ்வாறே எவரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காகக் கொடுத்து விடுகின்றாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போலவே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தான் பயனடைய அனுமதிக்க வேண்டும் என்று) அவர் நிபந்தனையிடா விட்டாலும் சரியே.

2754. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தியாக ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகம்’ என்று கூறினார். (இவ்விதம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) (எனவே) நான்காவது முறையில், ‘உனக்குக் கேடுண்டாகட்டும். அல்லது அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள்.
Book : 55


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ: «ارْكَبْهَا»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا بَدَنَةٌ، قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ: «ارْكَبْهَا وَيْلَكَ، أَوْ وَيْحَكَ»


Bukhari-2753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 உறவினர்களுக்காக மரண சாசனம் செய்யப்பட்டால் அதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்களா?

2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது.

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்.

இதே

قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214]،

قَالَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ المُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا»


Bukhari-2752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 ஒருவர் தன் உறவினர்களுக்கு வக்ஃபு அல்லது மரண சாசனம் செய்வதும், உறவினர் என்போர் யார், யார்? என்பதும்.

நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அதை (உன் தோட்டத்தை) உன் ஏழை உறவினர்களுக்குக் கொடுத்து விடு என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே போன்ற மற்றோர் அறிவிப்பை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே சுமாமா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அதில் இடம் பெற்றுள்ளதாவது: உன் ஏழை உறவினர்களுக்கு அதைக் கொடுத்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். ஆகவே, அவர் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார். அவர்களிருவரும் அபூதல்ஹாவுக்கு என்னை விட நெருக்கமான உறவினர்களாக இருந்தனர்.

அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் ஹஸ்ஸான் (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்குமிடையிலான உறவு முறை வருமாறு: அபூதல்ஹா (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸைத் என்பதாகும். ஸைத், ஸஹ்-ன் மகனாவார். ஸஹ்ல், அஸ்வத் என்பவரின் மகனும் அஸ்வத், ஹராம் என்பவரின் மகனும் ஹராம்,

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ»، قَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ، وَبَنِي عَمِّهِ، وَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214]، جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي: «يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ» لِبُطُونِ قُرَيْشٍ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214]، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ»


Bukhari-2751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2751. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத்தில் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். தன் பொறுப்பிலுள்ள (எஜமானின்) செல்வத்தைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.

மேலும், ‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன். என உமர்(ரலி) அறிவித்தார்.
Book :55


«كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»، قَالَ: وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ: «وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ»


Bukhari-2750

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறை வேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்) என்னும் (4:12) இறை வசனத்திற்குரிய விளக்கம்.

நபி (ஸல்) அவர்கள், மரண சாசனத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், (உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அடைக்கலப் பொருட்களை அவற்றிற்கு உரியவர்களிடம் திருப்பிச் செலுத்தி விடுங்கள்(4:58) என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆகவே, அடைக்கலப் பொருளைத் திருப்பிச் செலுத்துவது (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) உபரி நற்செயலான வஸிய்யத்தை நிறைவேற்றுவதை விட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகின்றது. மேலும், நபி (ஸல்) அவர்கள், தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும் என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி மரண சாசனம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், அடிமை தன் எஜமானின் செல்வத்தைப் பாதுகாப்பவன் ஆவான் என்று கூறினார்கள்.10

2750. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன்.

سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ، لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَاليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى»، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ العَطَاءَ، فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ، فَقَالَ: يَا مَعْشَرَ المُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ، الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الفَيْءِ، فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ


Next Page » « Previous Page